வடிவேலு நடிக்கலேன்னா கத்தி சண்டை படத்தில் நடிச்சிருக்க மாட்டேன்! - விஷால்

By Shankar

வடிவேலு நடித்ததால்தான் கத்தி சண்டை படத்தில் நான் நடித்தேன். இல்லையென்றால் இந்தப் படமே இல்லை என்றார் நடிகர் விஷால்.

சுராஜ் இயக்கத்தில் விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ள படம் கத்தி சண்டை.

Vishal praises Vadivelu comedy in Kaththi Sandai

வடிவேலு மீண்டும் நகைச்சுவை வேடத்தில் நடிப்பதை முன்னிட்டு, இப்படத்தின் டீசரில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

விழாவில் விஷால் பேசுகையில், "என்னிடம் சூரஜ் கதையைச் சொன்னபோது நான் அவரிடம் சொன்னேன், இந்தக் கதையில் வடிவேலுவை நடிக்க வையுங்கள். நானும் நடிக்கிறேன் என்றேன். பிறகு வடிவேலு இந்தப் படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டபிறகே நடிக்க சம்மதம் சொன்னேன்.

நானும் அவரும் சேர்ந்த நடித்த திமிரு படம் சூப்பர் ஹிட் ஆனது. நடிகர் சங்கத் தேர்தலில் இருவரும் இணைந்து பணியாற்றியதற்கு வெற்றி கிடைத்தது.

அதேபோல இருவருடைய கூட்டணிக்கும் மீண்டும் வெற்றி கிட்டும் என நம்புகிறேன் என்றார். வடிவேலுவைத் திரையில் பார்க்க ரசிகர்கள் விரும்புவார்கள். அவருடைய கதாபாத்திரத்தை அட்டகாசமாகச் செய்திருக்கிறார்," என்றார்.

கத்தி சண்டை, நவம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X