விஜயகாந்த் மகன் படத்துல நடிக்க ரெடி.. உலக நாயகன் கேப்டன்.. நினைவேந்தல் நிகழ்ச்சியில் விஷால் பேச்சு!
சென்னை: நடிகர் சங்கம் சார்பில் மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், கலந்து கொண்டு பேசிய நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்து வரும் நிலையில், அவரது படத்தில் கேமியோ ரோலிலோ அல்லது இணைந்து முழு படத்தில் நடிக்கவோ நானும் ரெடி தான் என உறுதியளித்துள்ளார்.
விஜயகாந்த் சாமி எப்போதும் நம்ம கூடவே இருப்பார். பல ஆயிரக் கணக்கான சினிமா கலைஞர்களுக்கும் உதவி இயக்குநர்களுக்கும் சாப்பாடு போட்டு பசியை ஆற்றியவர் விஜயகாந்த். 54 புதுமுக இயக்குநர்களை உருவாக்கிய உலக நாயகன் விஜயகாந்த் தான் என விஷால் பேசினார்.

நினைவேந்தல் நிகழ்ச்சி: ஜனவரி 19ம் தேதி மறைந்த கேப்டன் விஜயகாந்துக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்படும் என அறிவித்த விஷால் சொன்னதை சூப்பராகவே செய்துக் காட்டி விட்டார். பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டு கேப்டன் விஜயகாந்துக்கு புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்கவில்லை. ஆனால், கமல்ஹாசன், சியான் விக்ரம், கார்த்தி, விஷால், ஜெயம் ரவி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விஷால் பேச்சு: எங்க சாமி விஜயகாந்த் அண்ணா மறைந்து விட்டார். அவர் செய்த வேலைகளை இனிமேல் என்னால் முடிஞ்ச அளவுக்கு செய்ய முயற்சி செய்கிறேன். நடிகர் சங்க கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்க முயற்சிப்பேன் என பேசினார் விஷால்.
சண்முக பாண்டியனுக்கு வாய்ப்பு: நடிகர் விஷால் பேசும் போது விஜயகாந்த் அண்ணன் மகன் சண்முக பாண்டியன் விருப்பப்பட்டால் அவருடன் இணைந்து நடிக்க எப்போதுமே ரெடியாக இருப்பேன். அதுதான் கேப்டனுக்கு நான் செய்யும் ஒரு சின்ன நன்றிக் கடன். எத்தனையோ நடிகர்களை வாழ வைத்தவர் விஜயகாந்த் அண்ணன். 54 அறிமுக இயக்குநர்கள் வீட்டில் விளக்கேத்தி வச்சவரு அவரோட மகன் படத்துல கண்டிப்பா சேர்ந்து நடிப்பேன் என உறுதி அளித்துள்ளார்.
ராகவா லாரன்ஸ் அறிவிப்பு: முன்னதாக நடிகர் ராகவா லாரன்ஸும் சண்முக பாண்டியன் படத்தில் நடிக்க தயார் என அறிவித்திருந்த நிலையில், விஷாலும் அதே போன்ற உறுதியை அளித்துள்ளார். அதற்கு சண்முக பாண்டியன் மேடையேறி பேசும் போது நன்றி கூறினார்.
விஜய பிரபாகரன் நன்றி: கடைசியாக நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய விஜய பிரபாகரன் விஷால், நாசர், கார்த்தி, கருணாஸ் உள்ளிட்ட நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்பா பற்றி பேசும் போது எமோஷனலாஜி அழுது விட்டார்.


Click it and Unblock the Notifications











