விஜயகாந்த் நினைவிடத்தில் கால் வைத்ததும்.. விஷால் உடம்பில் இறங்கிய கேப்டன்.. அவரை மாதிரியே அன்னதானம்!

சென்னை: கேப்டன் விஜயகாந்த் போலவே நடிகர் சங்கத்தை கையில் எடுத்துக் கொண்டு பல விஷயங்களை செய்து வரும் விஷால் மறைந்த விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய காட்சிகள் ரசிகர்கள் கவனத்தை வெகுவாக கவர்ந்தன. விஜயகாந்த் உயிரிழந்த செய்தி அறிந்த உடனே ஓடோடி வந்து அவரது காலை தொட்டு வணங்க முடியாமல் போய் விட்டதே என ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய விஷால், விஜயகாந்த் போலவே அன்னதானம் வழங்கிய காட்சிகள் ரசிகர்களை புல்லரிக்கச் செய்து விட்டன.

புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அமெரிக்காவுக்கு சென்றிருந்தார் நடிகர் விஷால். கிறிஸ்துமஸ் நேரத்தில் நள்ளிரவில் ஒரு இளம் பெண்ணுடன் அவர் தலை தெறிக்க முகத்தை மறைத்துக் கொண்டு ஓடும் காட்சிகள் இணையத்தில் தீயாக பரவின. பின்னர், அந்த வீடியோ தன்னுடைய உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு செய்த பிராங்க் என விளக்கம் அளித்திருந்தார் விஷால்.

Vishal provides food after offering prayer at Vijayakanth memorial

விஜயகாந்த் மறைவு: புரட்சிக் கலைஞர் என மக்களால் கொண்டாடப்பட்ட விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குடும்பத்தினர் வெளிநாடுகளுக்கு அழைத்துச் சென்றும் உள்ளூரிலும் ஏகப்பட்ட வைத்தியங்கள் பார்த்து வந்தனர். ஆனால், எதுவுமே விஜயகாந்தை பழையபடி குணப்படுத்த முடியாமல் போக கடந்த டிசம்பர் 28ம் தேதி காலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்து விட்டது. பிரதமர் மோடி, ராகுல் காந்தி, மு.க. ஸ்டாலின் என அரசியல் தலைவர்களும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் விஜயகாந்த் மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

வெளிநாட்டில் விஷால்: விஜயகாந்த் மறைவின் போது அவரது இறுதி அஞ்சலியில் நடிகர் விஷால் பங்கேற்கவில்லை. வெளிநாட்டில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்து வந்தார். விஜயகாந்த் உயிரிழந்து கிட்டத்தட்ட 10 நாட்களுக்குப் பிறகு இன்று சென்னை திரும்பிய விஷால் கேப்டன் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தி விட்டு என்ன மன்னிச்சிடு விஜயகாந்த் சாமி என உருக்கமாக பேசியிருந்தார்.

விஜயகாந்த் ஆவி இறங்கிடுச்சா?: விஜயகாந்த் போலவே சினிமா, நடிகர் சங்கம், அரசியல் என ஆர்வம் காட்டி வருகிறார் புரட்சி தளபதி விஷால். எப்போதுமே பசியோடு வருபவர்களுக்கு உணவளித்து 9வது வள்ளலாகவே விஜயகாந்த் வாழ்ந்து வந்தார் என பலரும் பாராட்டி வரும் நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஷால், அங்கே வந்த பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் அன்னதானம் வழங்கினார். விஜயகாந்த் போலவே விஷாலும் சாப்பாடு போடுறாரே என சோஷியல் மீடியாவில் ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X