லோன் வசூலிக்கும் ஏஜென்டாக நடித்தவரை நிஜமாகவே அடித்த விஷால்!
Recommended Video

சென்னை : விஷால், சமந்தா நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான 'இரும்புத்திரை' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் சக்ஸஸ் மீட் இன்று நடைபெற்றது.
ஹீரோ விஷால், வில்லன் அர்ஜூன், ரோபோ ஷங்கர், காளி வெங்கட் ஆகியோர் இந்த விழாவில் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய விஷால் படத்தைப் பற்றிய சில விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

'இரும்புத்திரை' படத்தில் நடிக்கும்போது லோன் ஏஜென்டாக நடித்த விவேக் பிரசன்னாவை அடிக்கும் காட்சியில் நிஜமாகவே அவரை அடித்துவிட்டேன். பிறகு அவரிடம் மன்னிப்பு கேட்டேன். எல்லா சமூகப் பிரச்னைகளுக்கும் என் கோபத்தை வெளிப்படுத்தினேன். நீங்கள் படத்தில் பார்த்தது கட் செய்யப்பட்டதுதான் " எனக் கூறினார் விஷால்.
தனது அடுத்த படமான 'சண்டக்கோழி 2' படத்தை ரிலீஸுக்கு இரண்டு வாரங்கள் முன்பாகவே ஸ்க்ரீனிங் செய்வேன் எனவும் கூறினார். இயக்குநர் பி.எஸ்.மித்ரனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியதில் எனக்குப் பெருமை. அவர் நிச்சயமாக நிறைய நல்ல படங்களைக் கொடுப்பார் என நம்புகிறேன்' எனத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











