லக்ஷ்மி மேனனால் ஹன்சிகாவை ஓரங்கட்டிய விஷால்
சென்னை: லக்ஷ்மி மேனன் கேட்டுக் கொண்டதால் விஷால் தனது அடுத்த படத்தில் ஹன்சிகா வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
விஷால். லக்ஷ்மி மேனன் ஜோடி சேர்ந்த படம் பாண்டியநாடு. இந்த படத்தில் அவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது என்று கூறப்படுகிறது. படம் தீபாவளிக்கு ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த படத்தில் விக்ராந்த் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் முன்னணி தொலைக்காட்சி சேனல் ஒன்றில் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சியில் விஷாலும், லகஷ்மி மேனனும் கலந்து கொண்டு பேசினர்.

நான் சிகப்பு மனிதன்
விஷால் அடுத்ததாக நான் சிகப்பு மனிதன் என்ற படத்தை தயாரித்து நடிக்கிறார். பாண்டிய நாடு படத்தையும் விஷால் தான் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் லக்ஷ்மி
பாண்டிய நாடு நாயகி லக்ஷ்மி மேனன் தான் நான் சிகப்பு மனிதன் படத்திலும் விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.

ஹன்சிகா
நான் சிகப்பு மனிதன் படத்தில் ஹன்சிகாவை தனக்கு ஜோடியாக்க விஷால் விரும்பியுள்ளார். ஆனால் லக்ஷ்மி மேனனோ நம்ம கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது அதனால் நாம் மீண்டும் ஜோடி சேர வேண்டும் என்று விஷாலிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் விஷால் ஹன்சிகாவை விட்டுவிட்டு லக்ஷ்மியை மீண்டும் நாயகியாக்கியுள்ளார்.

கெமிஸ்ட்ரி
பிற நடிகர்களுடன் ஒப்பிடுகையில் தனக்கும், விஷாலுக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருப்பதாகவும், அது தனக்கு பிடித்துள்ளதாகவும் லக்ஷ்மி மேனன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











