#விஷால்31 அப்டேட் வெளியானது.. சண்டைக்காட்சியுடன் தொடங்கிய படப்பிடிப்பு

சென்னை: விஷால் நடிப்பில் இந்த ஆண்டு சக்ரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில் விஷாலின் அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது விஷாலின் 31வது படம் குறித்து புதிய அப்டேட் ஒன்றை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அடுத்த வெளியீடு

அடுத்த வெளியீடு

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் ஹீரோவாகவும், ஆர்யா வில்லனாகவும் "எனிமி" படத்தில் நடித்துள்ளனர். கதாநாயகியாக மிருனாளினி நடிக்கிறார். இந்த படத்தின் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கூடிய விரைவில் இந்த படம் வெளிவரவுள்ளது.

பிஸியாக விஷால்

பிஸியாக விஷால்

இதையடுத்து புதுமுக இயக்குனர் இயக்கும் #விஷால்31,

அடங்கமறு படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் இயக்கும் #விஷால்32, விஷாலே இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் 2ம் பாகம் என விஷாலுக்கு அடுத்தடுத்த படங்கள் உள்ள நிலையில் மிகவும் பிஸியாக உள்ளார் விஷால்.

விருதுகளை வென்றார்

விருதுகளை வென்றார்

தற்போது விஷாலின் 31வது படத்தை புது முக இயக்குனர்

து.ப.சரவணன் இயக்கி வருகிறார். இவர் எது தேவையோ அதுவே தர்மம் என்ற குறும் படத்தை இயக்கி அதற்காக பல விருதுகளை வென்றுள்ளார். இந்த படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தடம் பதிக்கிறார்.

விஷால் ட்வீட்

விஷால் ட்வீட்

கொரோனா பரவல் காரணமாக நின்று போன #விஷால்31 படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் தொடங்கியுள்ளது. அங்கு சண்டைக்காட்சிகள் உட்பட படத்தின் அனைத்து காட்சிகளையும் ஒரே கட்டமாக எடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இது குறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: vishal விஷால்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X