Mark Antony: எனக்கும் லட்சுமி மேனனுக்கும் இருக்குற உறவை கெடுத்துடாதீங்க ப்ளீஸ்.. விஷால் கோரிக்கை!

சென்னை: Vishal - நடிகர் விஷால் மார்க் ஆண்டனி படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் நடிகை லட்சுமி மேனனுடன் தன்னை இணைத்து தேவையில்லாமல் கிசுகிசு எழுத வேண்டாம் என்கிற கோரிக்கையை முன் வைத்து இருந்தார்.

பாண்டிய நாடு படத்தில் விஷால் மற்றும் லட்சுமி மேனன் இணைந்து நடித்த நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற ஃபை ஃபை பாடல் மிகப்பெரிய ஹிட் ஆனது. நீண்ட நாட்கள் கழித்து நடிகர் விஷாலுக்கும் பாண்டியநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

Vishal requests dont spoil my good relationship with Lakshmi Menon at Mark Antony success meet

அந்த படத்திற்கு பிறகு லட்சுமி மேனனை லக்கி சார்ம் என நினைத்த விஷால் அடுத்து நான் சிகப்பு மனிதன் படத்திலும் லட்சுமி மேனனை ஜோடியாக்கி இருந்தார். அந்த படத்தில் அதுவரை நடிக்காத அளவுக்கு விஷாலுடன் லட்சுமி மேனன் நெருக்கமாக நடித்தது தான் இப்படியொரு கிசுகிசு கிளம்பவே காரணமாக அமைந்தது.

முத்த மழை: நான் சிகப்பு மனிதன் படத்தில் லிப் லாக் முத்தம், தண்ணீருக்குள் உடலுறவு காட்சிகள் என எல்லை மீறி லட்சுமி மேனன் நடித்த நிலையில், இருவரும் காதலிப்பதாக பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் பரவின. ஏகப்பட்ட மீடியாக்களும் விஷால் - லட்சுமி மேனன் இருவரும் காதலித்து வருவதாக கிசுகிசுக்களை எழுதி வந்தனர்.

லட்சுமி மேனனை விட்டு விலகிய விஷால்: அந்த படத்திற்கு பிறகு எழுந்த சர்ச்சை காரணமாகவா அல்லது அந்த படம் தோல்வி அடைந்ததன் காரணமாகவா என்று தெரியவில்லை. அதன் பின்னர், லட்சுமி மேனன் உடன் நடிகர் விஷால் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வருகிறார்.

எங்க உறவை கெடுக்காதீங்க: இந்நிலையில், நேற்று நடைபெற்ற மார்க் ஆண்டனி படத்தின் வெற்றி சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஷால் படத்தை பற்றியும் படத்திற்காக உதவியவர்களுக்கும் நன்றி தெரிவித்து பேசி வந்தார்.

Vishal requests dont spoil my good relationship with Lakshmi Menon at Mark Antony success meet

அப்போது, விஷாலுக்கு பல ஆண்டுகள் கழித்து வெற்றி கிடைத்த சந்தோஷத்துடன் திருமண செய்தியும் வருமா என கேட்ட போது, கண்டிப்பா எனக்கு கல்யாணம் நடக்கும். உங்க எல்லாருக்கும் சொல்லிட்டுத் தான் செய்வேன். அதுவரை, மற்ற நடிகைகளுடன் கோர்த்து எழுதிடாதீங்க, அந்த நடிகைகள் ரொம்பவே பாதிக்கப்படுவாங்க என பேசினார்.

மேலும், பல நடிகைகளுடன் விஷாலை தொடர்பு படுத்தி பேசுவதாக ஒரு பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, இதுவரை லட்சுமி மேனன் குறித்துத் தான் நான் ட்வீட் போட்டுள்ளேன். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள், அந்த உறவை கெடுத்துடாதீங்க ப்ளீஸ் என கோரிக்கை வைத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X