ராஜ்மோகன் சினிமா துறை அமைச்சரா? தயவு செய்து வேண்டாமே.. CM விஜய்க்கு விஷால் கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவை மே 15ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் அமைச்சர் ராஜ் மோகனுக்கு பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித்துறை, தகவல் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை போன்ற இலாக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கும்போது, ராஜ் மோகன் சினிமா துறை குறித்து அனுபவம் இல்லாதவர், அப்படி இருக்கையில் அவரை சினிமாதுறைக்கு அமைச்சராக நியமித்ததை திரும்பப் பெற்றுக் கொண்டு, நீங்களே சினிமாதுறைக்கும் அமைச்சராக இருக்க வேண்டும் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் கோரிக்கை வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், " நம்ம முதலமைச்சர் விஜய், தவெகவில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையைப் பிரிச்சு கொடுத்ததைப் பார்க்க சந்தோஷமா இருக்கு. ஆனா, சினிமா தொழில்நுட்பம் மற்றும் சினிமாடோகிராப் சட்ட அமைச்சரா மாண்புமிகு ராஜ் மோகன் அவங்களை நியமிச்சிருக்கிறது கொஞ்சம் வருத்தமளிக்குது.

இப்போ சினிமா இண்டஸ்ட்ரி இருக்குற நிலைமையில, எக்கச்சக்கமான சீர்திருத்தங்கள் தேவைப்படுது; தயாரிப்பாளர்களும், தயாரிப்பு நிறுவனங்களும் ரத்தம் சிந்தி பிழைப்பு நடத்திட்டு இருக்காங்க. இந்தச் சூழல்ல, நம்ம சினிமா உலகத்தோட குறைகளையும், கோரிக்கைகளையும் ஒரு சங்கமாவோ இல்ல கூட்டமைப்பாவோ நாங்க எப்படி இவர்கிட்ட கொண்டு போய் சேர்க்க முடியும்? ஏன்னா, நம்ம CM விஜய் கடந்த 30 வருஷமா அடிமட்டத்துல இருந்து இந்த சினிமா இண்டஸ்ட்ரியோட ஒரு பகுதியா இருக்காங்க. இண்டஸ்ட்ரில என்ன நடக்குதுன்னு அவருக்குத் தெரிஞ்ச அளவுக்கு, சினிமா பத்தி பெருசா எந்த அனுபவமும் இல்லாத ஒரு புது அமைச்சருக்கு எப்படித் தெரியும்?

Vishal Requests Vijay to Personally Handle Cinema Portfolio Questions Raj Mohan Appointment

கோரிக்கைகள்: அதே மாதிரி முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவுசெஞ்சு இந்த விஷயங்களையும் கவனிங்க:

அரசாங்க டிக்கெட் விண்டோ (Govt Ticketing Window): தயவுசெஞ்சு அரசு மூலமா டிக்கெட் விற்கிற முறையைக் கொண்டு வாங்க. இதனால அரசாங்கத்துக்கும் வருமானம் வரும், ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் எக்ஸ்ட்ரா சர்வீஸ் சார்ஜ் கட்டும் ரசிகர்களுக்கும் பெரிய நிம்மதியா இருக்கும்.

உள்ளாட்சி வரி நீக்கம் (Abolish Local Body Tax): "ஒரே இந்தியா, ஒரே வரி" (GST) விதிமுறைக்கு எதிரா, இந்தியாவுலயே ரெண்டு வரி வசூலிக்கும் ஒரே மாநிலமா நாமதான் இருக்கோம். இந்த உள்ளாட்சி வரியை தயவுசெஞ்சு ரத்து பண்ணுங்க.

சிறு படங்களுக்கான மானியம் (Subsidy for Small Films): சின்ன பட்ஜெட் படங்களுக்கு வருஷம் வருஷம் தர்ற மானியத் தொகையை அதிகப்படுத்துங்க. இப்போ தர்றது ரொம்ப சொற்பமான தொகை.

9 வருசமா கொடுத்துட்டு இருக்கோம்: இதை ஒரு மனுவா முதலமைச்சர்கிட்ட கொடுக்கலாம் தான். ஆனா, இதே கோரிக்கையை நாங்க கடந்த 9 வருஷமா வச்சுட்டு தான் இருக்கோம். மேலும், அமைச்சர் ராஜ்மோகன் அவங்களை குறைச்சு மதிப்பிடல, அது என் நோக்கமல்ல, இது என்னோட தனிப்பட்ட கருத்து மட்டும்தான். நம்ம CM நினைச்சா மட்டும்தான் இந்த இண்டஸ்ட்ரிக்கு ஒரு நல்ல விடிவுகாலம் பிறக்கும். எல்லாம் நல்லபடியா நடக்கும்னு நம்புவோம்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X