Don't Miss!
- News 4ம் கட்ட லோக்சபா தேர்தல்! 10 மாநிலங்கள்.. 96 தொகுதிகளில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது
- Sports தோனியிடம் கற்க ஒன்றுமில்லை.. முஸ்தஃபிசுர் ரஹ்மானுக்கு அழைப்பு.. வார்த்தையை விட்ட பிசிபி நிர்வாகி!
- Technology எப்படி புதுசு புதுசா யோசிக்கிறாங்க.. Zomato அறிமுகம் செய்த புதிய சேவை.. என்ன தெரியுமா?
- Lifestyle தினமும் இட்லி தோசை செய்யாம.. பாஸ்தா இருந்தா இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க..
- Automobiles ஐபிஎல்-இல் வேண்டுமாயின் கதை வேறயாக இருக்கலாம்!! இந்த விஷயத்தில் சென்னையை விட பெங்களூர் தான் டாப்!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
அனிஷா லேசுபட்ட ஆள் இல்லை: ரகசியம் சொன்ன விஷால்
Recommended Video
சென்னை: தன் வருங்கால மனைவி பற்றிய ரகசியம் ஒன்றை தெரிவித்துள்ளார் விஷால்.
தயாரிப்பாளர் சங்க தலைவரான விஷால் தெலுங்கு நடிகை அனிஷா ரெட்டியை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். இது அனைவரும் நினைப்பது போன்று பெற்றோர்கள் பார்த்து ஏற்பாடு செய்த திருமணம் அல்ல. மாறாக இது காதல் திருமணம்.
இந்நிலையில் அனிஷா பற்றி விஷால் பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,
அனிஷா
நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அனிஷாவை முதன்முதலாக பார்த்தேன். அவரை பார்த்தவுடன் பிடித்துவிட்டது. எங்கள் நட்பு கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து திருமணம் வரை வந்துள்ளது. நான் தெரு நாய்களை பற்றி ஒரு படம் எடுக்க திட்டமிட்டிருந்தேன்.
காதல்
தெரு நாய்கள் பற்றிய படம் குறித்து நான் அனிஷாவிடம் தெரிவித்து அவரின் கருத்தை கேட்டிருந்தேன். அந்த படம் குறித்த விவாதங்களின் போது எங்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. நான் தான் காதலை முதலில் சொன்னேன்.
சினிமா
அனிஷாவை கடவுள் எனக்காக அனுப்பி வைத்துள்ளார். அனிஷா தேசிய அளவு கூடைப்பந்து வீராங்கனை ஆவார். மேலும் சமூக சேவை செய்து வருகிறார். அவர் திருமணத்திற்கு பிறகு நடிப்பது அவர் விருப்பம். அதில் நான் தலையிட மாட்டேன்.
புலி
அனிஷாவை பற்றிய ரகசியம் ஒன்றை சொல்கிறேன். அவர் ஒரு புலிக்கு பயிற்சி அளித்து வருகிறார். அவர் அந்த புலியை எளிதில் தூங்க வைத்துவிடுவார். அதை முதன் முதலாக பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன் என்கிறார் விஷால்.