எப்போ தான் பாஸ் தமிழ்ராக்கர்ஸ தடுப்பீங்க.. ஆக்‌ஷன் படமும் ஆன்லைனில் லீக்!

Recommended Video

ACTION MOVIE PUBLIC REVIEW | VISHAL | TAMANNAAH | YOGIBABU | SUNDAR C | FILMIBEAT TAMIL

சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் நேற்று வெளியான ஆக்‌ஷன் படம் தமிழ்ராக்கர்ஸ் உள்ளிட்ட ஆன்லைன் பைரஸி தளங்களில் லீக்காகியுள்ளது.

திருட்டு விசிடிக்கு எதிராகவும், ஆன்லைன் பைரஸிக்கு எதிராகவும் அதிகமாக போராடி வரும் நடிகர் விஷாலின் ஆக்‌ஷன் படமும் வெளியான முதல் நாளே ஆன்லைனில் கசிந்துள்ளது படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Vishal’s Action movie also leaked in Tamil Rockers

குறைந்த பட்ஜெட் படங்கள் என்றாலும் சரி, பெரிய பட்ஜெட் படம் என்றாலும் சரி, ரிலீசான முதல் நாளிலேயே ஆன்லைனில் பைரஸியாக வெளியாகின்றன.

சில திரையரங்குகளும், சினிமாவில் இருக்கும் முக்கிய நபர்களும் இதற்கு துணை போவதால்தான் ஆன்லைன் பைரசியை எவ்வளவு போராடினாலும் தடுக்க முடியவில்லை.

தீபாவளிக்கு வெளியான விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் கைதி படங்களும் ஆன்லைனில் அன்றைய தினமே லீக்காகின.

இந்நிலையில், விஷாலின் ஆக்‌ஷன் படமும் ஆன்லைன் பைரசிக்கு இரையாகியுள்ளது.

விஜய்சேதுபதியின் சங்கத்தமிழன் படம் நேற்று தாமதமாக இரவில் வெளியானதால், இன்னமும் தமிழ்ராக்கர்ஸ் தளத்தில் வெளியாகவில்லை. இன்று இரவுக்குள் அந்த படமும் அந்த கோர அரக்கனுக்கு இரையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்லைனில் படம் வெளியான சில நிமிடங்களிலேயே ஆயிரக்கணக்கான ரசிகர்கள், அதில் தரவிறக்கம் செய்து பார்ப்பதால், தான் ஆன்லைன் பைரஸி தொடர்ந்து ராஜ்ஜியம் செலுத்தி வருகிறது.

டெக்னாலஜி வளர்ச்சியால், எத்தனை லின்க்குகளை தடை செய்தாலும், புதிய புதிய லின்க்குகள் மூலம் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் வகையில் தமிழ்ராக்கர்ஸ் வேலை செய்து வருவது பல தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை கடனுக்கும் கஷ்டத்துக்கும் இரையாக்கி வருகிறது. நாயகர்கள் திரையில் நடத்தும் ஆக்‌ஷனை அவங்க துறையில் கொஞ்சம் நடத்தினால், நன்றாக இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X