இதுதான் தீபாவளி சரவெடி.. ஆக்ஷன் டிரைலர் ரிலீஸ்!
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆக்ஷன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகை தினமான இன்று தனது ரசிகர்களுக்கு சரவெடி தீபாவளி கொடுத்துள்ளார் நடிகர் விஷால்.
வரும் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார். மேலும், ஐஸ்வர்யா லக்ஷ்மி, ராம்கி, கபீர் துஹான் மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மீண்டும் ராம்கி
கார்த்தியின் பிரியாணி படத்திற்கு பிறகு சிறிய இடைவேளைக்கு பிறகு நடிகர் ராம்கி, ஆக்ஷன் திரைப்படத்தின் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஆக்ஷன் டிரைலரில் ராம்கி வரும் முக்கிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நிச்சயம் இந்த படம் ராம்கிக்கு ஒரு நல்ல கம்பேக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாலிவுட் வில்லன்கள்
பாலிவுட் வில்லனான கபீர் துஹான் மற்றும் ஆகான்ஷா புரி உள்ளிட்டோர் ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்துள்ளனர். பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு போட்டி போடும் அளவிற்கு விஷாலின் ஆக்ஷன் படம் உருவாகியுள்ளதால், பாலிவுட் வில்லன்களை களமிறக்கியுள்ளார் சுந்தர்.சி.

டிரைலர் எப்படி?
தீபாவளி பண்டிகை தினமான இன்று மாலை 4 மணிக்கு விஷாலின் ஆக்ஷன் டிரைலர் வெளியானது. சில வாரங்களுக்கு முன்பு வெளியான ஆக்ஷன் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இன்று வெளியாகியுள்ள ஆக்ஷன் டீசர் மேலும், பல ஆக்ஷன் காட்சிகளோடு நிறைந்துள்ளது.

தீபாவளி சரவெடி
கர்னல் சுபாஷ் எனும் ராணுவ அதிகாரியாக நடித்துள்ள விஷால், வெளிநாடுகளில் வில்லன் ஆட்களை ஓட ஓட துரத்தி அடிக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்து டிரைலர் சரவெடியாய் அதிர்கிறது.
விஷாலுக்கு சமமாக ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ள நடிகை தமன்னாவும் டீசரை போலவே டிரைலரிலும் ஆக்ஷன் காட்சிகளில் அசத்தியுள்ளார். அதுவும் ரோப் ஒன்றில் தொங்கி வரும் காட்சியில் பிரமிக்க வைக்கிறார்.
பிஜிஎம்
சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்த ஆம்பள படத்தின் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி தமிழா, தொடர்ந்து பல படங்களில் இசையமைத்து வருகிறார். ஆக்ஷன் காட்சிகள், சேஸிங் காட்சிகள் அதிகம் நிறைந்துள்ள ஆக்ஷன் படத்தில் விஷாலுக்கான மாஸ் பிஜிஎம் மற்றும் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











