மீண்டும் மிலிட்ரியா.. மிரட்டும் விஷாலின் ’சக்ரா’ ஃபர்ஸ்ட் லுக்!

Recommended Video

Chakra First Look:விஷால் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

சென்னை: ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் பரம் வீர் சக்ரா போன்ற சக்ரா விருதுகளை குறிக்கும் வண்ணம் விஷாலின் அடுத்த பட டைட்டில் அமைந்துள்ளது.

சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா, ஐஸ்வர்யா லட்சுமி, ஆகான்க்‌ஷா புரி, பழ. கருப்பையா, ராம்கி, கபிர் சிங் துஹான், சாயா சிங், யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் படம் இன்று வெளியாகி வெற்றிநடை போடுகிறது.

இந்நிலையில், விஷால் தனது ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் வழங்கும் விதமாக தனது அடுத்த படமான 'சக்ரா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

யார் ரிலீஸ் பண்ணா

இப்போதெல்லாம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை பிரபலங்களை வைத்து ரிலீஸ் செய்து வருகின்றனர். விஷாலின் இந்த ‘சக்ரா' ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் கெளதம் மேனன் சற்று முன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த லுக் விஷாலுக்கு சரியாக இருக்கிறது என்றும், சக்ரா குழுவுக்கு வாழ்த்துகள் என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சக்ரா

அறிமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ரெஜினா கசாண்ட்ரா, ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, ரோபோ சங்கர் நடிப்பில் ‘சக்ரா' படம் உருவாகவுள்ளது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில் லாரி ரிம்மை கையில் தூக்கி மிரட்டுகிறார் விஷால். அவருடைய ஆறடி உயரத்துக்கு எந்த ஸ்டன்ட் செய்தாலும் கச்சிதமாகத்தான் இருக்கும்.

மீண்டும் யுவன்

மீண்டும் யுவன்

இரும்புத்திரை, சண்டக்கோழி 2 படங்களை தொடர்ந்து மீண்டும் யுவன் சங்கர் ராஜா, விஷாலின் ‘சக்ரா' படத்திற்கு இசையமைக்கவுள்ளார். விஷால் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான அயோக்யா படத்திற்கு சாம் சி.எஸ்., மற்றும் இன்று வெளியாகியுள்ள ஆக்‌ஷன் படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்துள்ள நிலையில், மீண்டும் யுவன் இசையில் விஷாலின் அடுத்த படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மிலிட்ரி

மீண்டும் மிலிட்ரி

விஷால் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ஆக்‌ஷன் படத்தில் விஷால் ராணுவ வீரராக நடித்துள்ளார். இந்நிலையில், அடுத்தாக விஷால் நடிப்பில் உருவாகவுள்ள ‘சக்ரா' படத்தின் டைட்டில் டிசைனே ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் மெடல் போல அமைந்துள்ளதால், நிச்சயம் அடுத்த படத்திலும் விஷால் மிலிட்ரிமேனாக நடிக்கவுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

More from Filmibeat

Read more about: vishal chakra விஷால்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X