‘சக்ரா‘ டீஸர் விரைவில்..விஷாலின் கால சக்கரத்தை மாற்றுமா .. ரசிகர்கள் ஆர்வம் !
சென்னை : விஷால் நடித்து வரும் 'சக்ரா' படத்தின் டீஸர் தயாராகி வருகிரது. விரைவில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் முடிந்துவிட்டது. முழுதாக முடிக்கும் நேரத்தில் கொரோனா கால பொதுமுடக்கம் வந்து விட்டது. எனவே ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறாமல் தடைபட்டுவிட்டது. அனுமதி கிடைத்ததும் படபிடிப்பு நடைபெறும்.
Recommended Video
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி மூலம் தயாரிக்கும் படத்தை இயக்குபவர் எம்.எஸ். ஆனந்தன். இவர் இயக்குநர் எழிலிடம் உதவியாளராகப் பணிபுரிந்தவர். 'சக்ரா ' - ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார்.
இவர்களுடன் ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடிக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதியிருக்கிறார். ஒளிப்பதிவு பாலசுப்பிரமணியம், படத்தொகுப்பு சமீர் முகமது, கலை எஸ்.கண்ணன், சண்டைக்காட்சி அனல் அரசு, PRO ஜான்சன்.

விரைவில் டீசர்
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. இப்படம் விஷால் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அனைவரின் கண்களுக்கும் விருந்தாக அமையும் என்றும் கூறப்படுகிறது. டீஸர் வெற்றி பெற வேண்டும் என்று படத்தின் பிரத்யேக ஷாட்ஸ் செலக்ட் செய்து எடிட்டிங் செய்கிறார்கள்.

ஸ்ருஷ்டி டாங்கே
படத்தின் இரண்டு முக்கிய கதாபாத்திரங்களில் ஸ்ரதாவும் ஸ்ரூஷ்டியும் நடிக்கிறார்கள். பல் வேறு வெற்றி படங்களில் நடித்த இவர்கள் இந்த படத்தில் ஒன்று சேர்ந்து முதல் முறையாக நடிக்கிறார்கள். பல விதமான நவீன உடைகள் உடுத்தி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்கள். படத்தின் கதையில் மிக அதிகமான சஸ்பென்ஸ் காட்சிகள் இருப்பதினால் மிகவும் மெனக்கெட்டு பல பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளனர்.

காமெடி போலீஸ்
படத்தின் ஸ்வாரஸ்யத்தை கூட்ட நகைச்சுவையுடன் சீரியஸ் கதாபாத்திரங்களை செய்வதில் கெட்டிக்காரராக இருக்கும் ரோபோ ஷங்கர் இந்த படத்தில் நடித்து இருக்கிறார். நிறைய காட்சிகளில் போலீஸ் உடையில் வந்து அமுளி துமிளி செய்கிறார் ரோபோ. படத்தின் திரை கதை ஓட்டத்துக்கு கண்டிப்பாக இவரும் ஒரு முக்கிய பலம் என்றே சொல்லலாம்.

வெற்றியை கொடுக்கும்
சமீப காலங்களில் விஷால் பல் வேறு சிக்கல்களை சந்தித்து வரும் சூழலில் இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறார். அவரது ரசிகர்களும் இந்த படத்தின் மீது அதிகம் நம்பிக்கை வைத்து உள்ளனர். அரசியல், தேர்தல், சங்கம் என்று பல விஷயங்களுக்கு நடுவில் இந்த படத்தின் வெற்றி தான் விஷாலின் எல்லா முயற்சிகளையும் திரும்பி பார்க்க வைக்கும் என்று அவரது நெருங்கிய நலம் விரும்பிகள் சொல்லி வருகிறார்கள். விஷாலின் கால சக்கரத்தில் இந்த சக்ரா நல்ல வெற்றியை கொடுக்கும் என்று நம்புவோம் .


Click it and Unblock the Notifications











