சென்னையில் 'சக்ரா' கடைசிக்கட்ட ஷூட்டிங்.. சஸ்பென்ஸ் நடிகையுடன் ஹீரோ விஷால் நடிக்கும் காட்சிகள்!
சென்னை: விஷால் நடிக்கும் சக்ரா படத்தின் கடைசிக்கட்ட ஷூட்டிங் சென்னையில் தொடங்கி இருக்கிறது.
நடிகர் விஷால், மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் 2, சக்ரா படங்களில் நடித்து வந்தார்.
மிஷ்கினுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, துப்பறிவாளன் 2 ஷூட்டிங்கை அவர் தொடங்கவில்லை.

அறிமுக இயக்குனர்
மிஷ்கினுக்குப் பதிலாக விஷாலே அந்தப் படத்தை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையே அறிமுக இயக்குனர் அனந்தன் இயக்கும் சக்ரா படத்தில் நடித்து வந்தார். இதில் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார். ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா
ரெஜினா நடிப்பதை படக்குழு சஸ்பென்சாக வைத்திருந்தது. ஆனால், அவர் நடிக்கும் தகவல் ஏற்கனவே வெளியாகிவிட்டன. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். 7 நாட்கள் ஷூட்டிங் பாக்கி இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன.

பெண்குயின்
இந்நிலையில், இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இதற்கிடையே, ரெடியான படங்களை பல தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட சில படங்கள் ஓடிடியில் வெளியாயின.

சூரரைப் போற்று
இந்நிலையில், சூர்யாவின் சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்பட பல படங்கள், ஓடிடியில் வெளியாக இருக்கின்றன.

கடைசிக்கட்ட படப்பிடிப்பு
இந்நிலையில் நடிகர் விஷாலும் தனது சக்ரா படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்வதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தின் கடைசிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. இதில் படக்குழு சஸ்பென்சாக வைத்திருக்கும், ரெஜினாவுடன் விஷால் நடிக்கும் காட்சிகள் படமாகி வருகின்றன.

பேச்சுவார்த்தை
இன்னும் மூன்று நாட்களில் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று படக்குழு கூறியுள்ளது. இதையடுத்து ஓடிடி-யில் வெளியிடுவது பற்றி, நடிகர் விஷால் சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக தீபாவளிக்கு வெளிவரும் என்று அவர் சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











