ஓடிடி-யில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது சக்ரா.. உறுதி செய்தார் விஷால்.. எந்த தளம்னு சொல்லலையே?

By

சென்னை: தனது சக்ரா படம் ஓடிடியில் வெளியாகிறது என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் சினிமாதுறையினர் கவலையில் உள்ளனர். தியேட்டர்களை திறப்பது பற்றி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

 சூரரைப் போற்று

சூரரைப் போற்று

இதற்கிடையே ரெடியான படங்களை பல தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். நடிகை ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேஷின் பெண்குயின் உள்ளிட்ட சில படங்கள் ஓடிடியில் வெளியாயின. இந்நிலையில் நடிகர் சூர்யா தனது சூரரைப் போற்று படம் அமேசான் பிரைமில் வெளியாவதாக அறிவித்தார்.

 க/பெ ரணசிங்கம்

க/பெ ரணசிங்கம்

மேலும் விஜய் சேதுபதி நடித்துள்ள க/பெ ரணசிங்கம், சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்பட பல படங்கள், ஓடிடியில் வெளியாக இருக்கின்றன. இந்நிலையில் நடிகர் விஷாலும் தனது சக்ரா படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்கிறார். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது.
இதில் ராணுவ அதிகாரியாக விஷால் நடிக்கிறார்.

 ஸ்ரத்தா ஸ்ரீநாத்

ஸ்ரத்தா ஸ்ரீநாத்

அறிமுக இயக்குனர் ஆனந்தன் படத்தை இயக்கியுள்ளார். இன்னும் 7 நாட்கள் இதன் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது. ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர், மனோபாலா, சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

Recommended Video

Vishal-ன் அப்பா GK Reddy 82 வயசிலும் வெறித்தனமான WorkOut | Filmibeat Tamil
 தீபாவளிக்கு 'சக்ரா'

தீபாவளிக்கு 'சக்ரா'

இதுபற்றி விஷால் அளித்துள்ள பேட்டியில், இந்தப் படத்தை ஓடிடியில் வெளியிட பேசி வருகிறோம். கண்டிப்பாக தீபாவளிக்கு 'சக்ரா' வெளியாகும். இன்னும் சில நாட்கள்தான் படப்பிடிப்பு மீதமுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், 'சக்ரா' படமும் ஓடிடி தளத்தில் வெளியாவது உறுதியாகியுள்ளது. ஆனால், எந்த ஓடிடி நிறுவனத்துடன் விஷால் பேசிவருகிறார் என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X