4 மொழிகளில் வெளியாகிறது விஷாலின் 'சக்ரா'.. டாப் ஹீரோக்கள் வெளியிட சனிக்கிழமை வருகிறது டிரைலர்!
சென்னை: விஷால் நடிக்கும் சக்ரா படம் நான்கு மொழிகளில் வெளியாக இருக்கிறது.
கொரோனா லாக்டவுன் காரணமாகp படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. படங்களின் ரிலீஸ்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
இதனால் சினிமாதுறையினர் கடும் கவலையில் உள்ளனர். வட்டிக்கு வாங்கி படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், எப்போது இந்தப் பிரச்னை முடிந்து படங்களை ரிலீஸ் செய்வது என்ற கவலையில் உள்ளனர்.

லாக்டவுன்
இதற்கிடையே ரெடியான சில படங்களை தயாரிப்பாளர்கள் ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகின்றனர். எப்போது தியேட்டர்கள் திறக்கப்படும் என்பது தெரியாத நிலையில் இந்த முயற்சியில் மேலும் பல தயாரிப்பாளர்கள் இறங்கியுள்ளனர். இதற்கிடையே, இந்த லாக்டவுனை பயன்படுத்தி மற்ற மொழிகளில் படத்தை மொழிமாற்றம் வேலைகளில் சில பெரிய படங்கள் ஈடுபட்டுள்ளன.

4 மொழிகளில்
விஜய்யின் 'மாஸ்டர்' படம், வழக்கமாக தெலுங்கு மொழியில் மட்டுமே டப் செய்து வெளியிடப்படும். இப்போது தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது. அதே போல விஷால் ஹீரோவாக நடித்து தயாரித்துள்ள சக்ரா படமும் 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதை அறிமுக இயக்குனர் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கி உள்ளார்.

சிருஷ்டி டாங்கே
ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா காஸண்ட்ரா ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மனோபாலா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, கே.ஆர்.விஜயா உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் இந்தப் படத்தை பாதியில் விட்டுவிட்டு, 'துப்பறிவாளன் 2' படத்துக்காகச் சென்றார் விஷால்.

ரெடியாகி விட்டது
இதனால் சக்ரா கைவிடப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால், இந்தப் படம் கைவிப்படவில்லை. இறுதிக்கப்பட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் கூறியிருந்தார். அதன்படி இறுதிக்கட்டப் படப்பிடிப்பு முடிந்து படம் ரெடியாகிவிட்டது. இந்நிலையில் இதன் டிரைலர் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாவதாக இருந்தது. இப்போது சனிக்கிழமை (27 ஆம் தேதி) வெளியாகிறது.

மோகன்லால், யாஷ்
இந்த டிரைலரும் 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது. தமிழ் டிரைலரை நடிகர்கள் கார்த்தி, ஆர்யா, தெலுங்கு டிரைலரை ராணா, மலையாள டிரைலரை மோகன்லால், கன்னட டிரைலரை 'கே.ஜி.எஃப்' யாஷ் ஆகியோர் வெளியிட உள்ளனர். படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதில், விஷால் ராணுவ அதிகாரியாக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











