அடுத்த இரும்புத்திரையா? விஷுவல்ஸ் எல்லாம் தெறிக்குது.. விஷாலின் சக்ரா படத்தின் டிரைலர் ரிலீஸ்!
சென்னை: நடிகர் விஷாலின் சக்ரா படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகர் கார்த்தி, ஆர்யா தமிழ் டிரைலரை வெளியிட்டனர். தெலுங்கு டிரைலரை நடிகர் ராணாவும், மலையாளம் டிரைலரை மோகன் லாலும் வெளியிட்டனர். கே.ஜி.எஃப் நடிகர் யஷ், கன்னட டிரைலரை வெளியிட்டுள்ளார்.
#Chakra என்ற ஹாஷ்டேக்கில் விஷாலின் சக்ரா படத்தின் டிரைலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சக்ரா
இயக்குநர் எம்.எஸ். ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா கஸாண்ட்ரா, சிருஷ்டி டாங்கே, ரோபோ சங்கர், மனோ பாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் சக்ரா படம் உருவாகி உள்ளது. சமீபத்தில் வெளியான 35 நொடி க்ளிம்ப்ஸ் காட்சிகள் வைரலான நிலையில், தற்போது அதிரடியான டிரைலர் வெளியாகி இருக்கிறது.

டிரைலர் எப்படி இருக்கு
ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள சக்ரா படத்தின் டிரைலரின் ஆரம்பத்தில் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் நாள், சென்னையில் 18 இடங்களில் ஹேக்கர்கள் கொள்ளையடிக்கின்றனர். அதில், பரம் வீர் சக்ரா விருதும் ஒன்று. ராணுவ வீரரான விஷால், டெக்னிக்கல் கொள்ளைக்காரர்களை எப்படி பிடிக்கிறார் என்பதை விறுவிறுப்புடன் டிரைலரில் கூறி இருக்கின்றனர்.

அடுத்த இரும்புத்திரையா?
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா, அர்ஜுன் நடிப்பில் வெளியான இரும்புத்திரை படம் ஹேக்கிங் கதையை மையப்படுத்தி மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. அந்த படத்தை போலவே, இந்த படத்திலும் ஹேக்கர்கள் செய்யும் அட்டகாசத்தை நடிகர் விஷால் கண்டு பிடித்து பழி வாங்குகிறார்.

மாஸ்க் மேன்
சக்ரா படத்தின் வில்லன் குறித்த சஸ்பென்ஸ் டிரைலரிலும் நீடித்துக் கொண்டு இருக்கிறது. மாஸ்க் அணிந்தபடி டிரைலர் முழுவதும் பல வில்லத்தனங்களை செய்யும் அந்த மாஸ்க் மேன், வைரஸை போல கண்ணுக்குத் தெரியாத டிஜிட்டல் ஹேக்கிங்கும் ஆபத்து தான் என இறுதியாக பேசும் வசனம் மற்றும் மோடியின் டிஜிட்டல் இந்தியா பாதுகாப்பானது என்ற பேச்சு சர்ச்சையை உருவாக்கும் விதத்தில் ஒரு புள்ளியை வைத்திருக்கிறது.


Click it and Unblock the Notifications