விஷால் ஆர்.கே. நகரில் போட்டியிடுவதை அனுமதிப்பது சரியா?: சேரன்
சென்னை: விஷால் போட்டியிடுவதை நண்பர்கள் எப்படிபார்க்கிறீர்கள் அனுமதிப்பது சரியா என இயக்குனர் சேரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடுகிறார். நாளை அவர் மனுதாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து சேரன் மக்களிடம் கருத்து கேட்டுள்ளார்.
விஷால் போட்டியிடுவதை அனுமதிப்பது சரியா என்று கேட்டுள்ளார் சேரன்.
விஷால்
நேற்றுதான் அரசியல் பேசவேண்டாம் என நினைத்தேன்..இன்று பேசத்தூண்டுகிறது.விசால் போட்டியிடுவதை நண்பர்கள் எப்படிபார்க்கிறீர்கள் அனுமதிப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பாராட்டுகள்
அவரின் துணிச்சலுக்கே முதலில் பாராட்டுகள் வெற்றி தோல்வியை மக்கள் தீர்மானிப்பார்கள் என ஒருவர் சேரனுக்கு பதில் அளித்துள்ளார்.
தமிழகம்
இது என்ன மல்யுத்தமா.. வெறும் துணிச்சலை மட்டும் ரசித்துதான் இத்தனை வருடம் பாழாய்போனது தமிழகம்... என சேரன் ஒருவருக்கு பதில் அளித்துள்ளார்.
காமெடியன்
விஷால் ஒரு ஹீரோவாக
மட்டுமே ரசிக்கிறார்கள் மக்கள்..
இல்ல நான் ஒரு
காமிடியனாகவும் கலக்குவேன்
அரசியலில் இறங்கி என்றால்
விஜயகாந்த், வைகோ,
திருமா, வாசன், வரிசையில்..
நெட்டிசனின் கைகளில்
சிக்கி விடுவார்..✍
தாழிக்க தயார்..
தக்காளி ஆவரா தங்கமாவரா..?
செயலே செம்மபடுத்தும்..✍ ✍,
முயற்சி
திரைத்துறையில் நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் என அவர் வசம் இருந்தும் சினிமா துறை பாதுகாப்பற்று உள்ளது இதை எல்லாம் சரி செய்து நான் ஒரு நல்ல நிர்வாகி என நிருபித்த பின் முயன்று இருக்கலாம்.


Click it and Unblock the Notifications











