twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பண மோசடி வழக்கு.. விஷாலின் முன்னாள் கணக்காளர் ரம்யாவின் முன் ஜாமின் மனு தள்ளுபடி

    By Sivam
    |

    சென்னை: நடிகர் விஷால் தயாரிப்பு நிறுவன கணக்காளரின் முன் ஜாமின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

    நடிகர் விஷால், தன்னுடைய தந்தையை தொடர்ந்து, சில படங்களை தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து வருகிறார்.

    Vishal’s ex accountant Ramya pre-bail request dismissed by HC

    விஷால் பிலிம் பேக்ட்டரி என்கிற பெயரில் இயக்கும் இந்த நிறுவனம், சென்னை வடபழனி குமரன் காலனியில் உள்ளது. இதில், சாலிகிராமத்தை சேர்ந்த ரம்யா என்கிற பெண் கணக்காளராக கடந்த 5 வருடங்களாக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதலே விஷால் ஃபிலிம் பேக்ட்டரி வருமான வரித்துறைக்கு கட்ட வேண்டிய டிடிஎஸ் தொகை, காணாமல் போவதாக கூறப்பட்டு வந்த்து.

    இதையடுத்து நிறுவனத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து, சோதனை செய்ததில், கணக்காளர் ரம்யா அரசுக்கு கட்ட வேண்டிய டிடிஎஸ் தொகையை தன்னுடைய கணவர் வங்கி கணக்கிற்கும், குடும்ப உறுப்பினர் ஒருவருவரின் வங்கி கணக்கிற்கும் அனுப்பியது கண்டு பிடிக்கப்பட்டது.

    பிரபல நடிகைக்கு பிறந்த நாள் கட்டியணைத்து முத்தம் கொடுத்து வாழ்த்து சொன்ன அம்மா.. யாருன்னு பாருங்க!பிரபல நடிகைக்கு பிறந்த நாள் கட்டியணைத்து முத்தம் கொடுத்து வாழ்த்து சொன்ன அம்மா.. யாருன்னு பாருங்க!

    இதை தொடர்ந்து விஷால் பிலிம் பேக்ட்டரி நிறுவனத்தின் மேலாளர் ஹரி கிருஷ்ணன் இது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் மோசடி செய்த ரம்யாவை கைது செய்ய வேண்டும் என்றும், மோசடி செய்த 45 லட்ச ரூபாயை பெற்று தர வேண்டும் என்றும் கூறப்பட்டது.

    இதன் அடிப்படியில் கணக்காளர் ரம்யா மீது, மோசடி, போலி ஆவணங்கள் தயாரித்தது உட்பட நான்கு வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரம்யா முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன்பு நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி ரம்யாவின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

    English summary
    Vishal ex accountant Ramya pre-bail disqualified by High Court today. She cheating money from Vishal’s VFF office for the last 5 years.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X