நடிகர் சங்கத்தை அவமதிக்கவில்லை - விஷால் விளக்கம்

By Shankar

Vishal
சென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில் நடிகர் சங்கத்தை அவமதிக்கவில்லை என்று நடிகர் விஷால் விளக்கம் அளித்துள்ளார்.

இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பால் 'விஸ்வரூபம்' படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கருத்து வெளியிட்ட நடிகர் விஷால், நடிகர் சங்கம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று கேள்வி எழுப்பினார்.

பெரிய நடிகரான கமலுக்கே இந்த கதி என்றால் சிறிய நடிகர்கள் நிலைமை என்னவாகும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு நடிகர் சங்க செயற்குழு அதிருப்தி வெளியிட்டது. விஷால் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறுப்பினர்கள் வற்புறுத்தினர். இதையடுத்து விஷாலுக்கு விளக்கம் கேட்டு நடிகர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியது.

'விஸ்வரூபம்' படம் வெளியாவதற்கு நடிகர் சங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் நோட்டீசில் சுட்டிக்காட்டப்பட்டன. 10 நாட்களில் நோட்டீசுக்கு பதில் அனுப்ப வேண்டும் என்றும் கெடு விதிக்கப்பட்டது. இந்த நோட்டீசுக்கு விஷால் பதில் அனுப்பி உள்ளார்.

அவரது கடிதம் நடிகர் சங்க அலுவலகத்துக்கு வந்துள்ளது. அதில் நடிகர் சங்கத்தை அவமதிக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. ட்விட்டரில் கருத்து வெளியிட்ட சூழ்நிலை பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். இந்த கடிதத்தை நடிகர் சங்கம் ஆய்வு செய்து வருகிறது. அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பது ஓரிரு நாளில் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X