மாணவர்களின் கல்விச் செலவுக்கு பணம் கொடுத்த விஷால்!
திருப்போரூர்: இரண்டு மாணவ மாணவிகளின் கல்விச் செலவுக்கு தனது தேவி அறக்கட்டளையிலிருந்து பண உதவி செய்துள்ளார் விஷால்.
சண்டைகோழி-2 படபிடிப்பில் இருந்த நடிகர் விஷாலுக்கு, திருப்போரூர் பகுதியைச் சேர்ந்த மகாதேவி என்பவர் பிஎஸ்சி 3ஆம் ஆண்டு படிப்பு தொடர்வதற்கு மிகவும் சிரமத்தில் இருக்கும் தகவலைத் தெரிவித்தனர்.

உடனடியாக விஷால் தனது தேவி அறக்கட்டளையிலிருந்து மகாதேவி படிப்பை முடிப்பதற்கு தேவையான ₹14,000.00 உதவி தொகை வழங்கினார்.
அதேபோன்று நடிகர் சங்க உறுப்பினர் மதுரை ஜெயந்தி என்பவரின் மகனுடைய கல்விச் செலவுக்கு ₹18,000.00 ஐ தேவி அறகட்டளை மூலம் வழங்கினார்.


Click it and Unblock the Notifications











