»   »  அஅஅ.... சிம்புவை பழி வாங்கிய விஷால்!

அஅஅ.... சிம்புவை பழி வாங்கிய விஷால்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சிம்புவுக்கு உதவிய விஷால் என்றுதான் தலைப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால் தலைப்பு மாறியதற்கு காரணம் கடைசியில்...

நேற்று சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் ரிலீஸ். சிம்பு படத்திலேயே முதன்முறையாக ஒரு படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகிறது என்று குஷியில் இருந்தார்கள் சிம்பு ரசிகர்கள். ஆனால் விதி வலியது ஆயிற்றே... நேற்று காலை நடந்த பஞ்சாயத்து ஒன்றில் சிக்கிய ஏஏஏ காலைக் காட்சிகள் ரிலீஸ் ஆகவில்லை. மதியம் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகமும் எழுந்தது.

Vishal's help to release AAA

விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகிகள் பேசி முடித்ததால் நேற்று மதியம் படம் ரிலீஸானது. சிம்புவும் விஷாலும் எதிரிகள் என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷையும் விஷாலையும் கிண்டல் செய்து வசனம் படத்திலும் இடம்பெற்றிருந்தது.

தலைப்புக்கு காரணம்...? படத்தை பார்த்தவர்கள் அப்படித்தான் கிண்டலடிக்கிறார்கள். படத்தை விஷால் பார்த்துவிட்டு இந்த படம் ரிலீஸானால் சிம்பு காலி என்று ப்ளான் பண்ணி ரிலீஸ் செய்ய உதவியிருக்கிறார் போல... படம் அவ்வளவு மோசம் என்று சிரிக்கிறார்கள்.

English summary
Producer council president Vishal has helped to release Simbu's AAA movie smoothly at the last hour.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil