»   »  கேளிக்கை வரி பிரச்சினை.... இன்று நல்ல முடிவு வரும்! - விஷால் நம்பிக்கை

கேளிக்கை வரி பிரச்சினை.... இன்று நல்ல முடிவு வரும்! - விஷால் நம்பிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கேளிக்கை வரி பிரச்சினையில் இன்று நல்ல முடிவு கிடைக்கும் என தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் கூறினார்.

திரைப்படங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள 10 சதவீத கேளிக்கை வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசிடம் சினிமா திரையுலகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக தமிழ்நாடு சினிமா தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால், தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் உள்ளிட்ட திரைத்துறை பிரமுகர்கள், செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஆகியோருடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Vishal's hope in entertainment tax issue

தலைமைச் செயலகத்தில் நேற்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்தது. ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "இரண்டாம் நாள் பேச்சுவார்த்தை நடந்து முடிந்தது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதில் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. நாளைக்குள் (12-ந் தேதி) தீர்வு வரும் என்று நம்புகிறோம்," என்றார்.

English summary
Producers Council president Vishal hoped that the govt would give positive response today in Entertainment tax issue.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil