அவ்வளவு நல்லவராக இருந்தால் சம்பளத்தில் இருந்து கொடுங்க: விஷாலை விளாசும் நெட்டிசன்ஸ்
சென்னை: விஷால் நல்லது செய்தாலும், கெட்டது செய்தாலும் திட்டு வாங்குகிறார்.
வெங்கட் மோகன் இயக்கத்தில் விஷால், ராஷி கன்னா, பார்த்திபன், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள அயோக்யா படம் பல பிரச்சனைகளுக்கு பிறகு வெளியாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் விஷால் தரப்பில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அயோக்யா
விற்பனையாகும் அயோக்யா டிக்கெட்டுகளில் ஒவ்வொரு டிக்கெட்டில் இருந்தும் தலா 1 ரூபாய் தமிழக விவசாயிகளுக்கு அளிக்கப்படும் என்று விஷால் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக துப்பறிவாளன் படத்திற்கும் இப்படி அறிவிப்பு வெளியிட்டு சொன்னபடி செய்தார்கள்.
விஷால்
விவசாயிகளுக்கு உதவும் விஷாலின் நல்ல எண்ணத்தை பலரும் பாராட்டியுள்ளனர். விஷாலின் அறிவிப்பை பார்த்துவிட்டு அவரின் ரசிகர்கள் தவிர்த்து பிற நடிகர்களின் ரசிகர்களும் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.
லாஜிக்கே இல்லை
அது என்ன டிக்கெட்டில் இருந்து விவசாயிகளுக்கு பணம் கொடுப்பது. அவ்வளவு நல்லவராக இருந்தால் விஷால் தனது சம்பளத்தில் இருந்து கொடுக்க வேண்டியது தானே என்று நெட்டிசன்கள் சிலர் அவரை விளாசியுள்ளனர்.

தயாரிப்பாளர்கள்
விவசாயிகளுக்கு உதவுவது எல்லாம் இருக்கட்டும் நீங்கள் தலைமை வகிக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த சிறு தயாரிப்பாளர்களின் கதறல்களை முதலில் கேளுங்கள். அவர்களை கண்டுகொள்ளாமல் இருப்பது நல்லது அல்ல என்றும் நெட்டிசன்கள் விஷாலுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











