கையில் துப்பாக்கியுடன் மாஸ் காட்டும் விஷால்: மிரட்டலாக வெளியானது மார்க் ஆண்டனி ஃபர்ஸ்ட் லுக்
சென்னை: தமிழில் முன்னணி நடிகரான விஷால் இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், விஷால் பிறந்தநாள் ஸ்பெஷலாக 'மார்க் ஆண்டனி' படத்தின் முதல் தோற்றம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் விஷால்
தமிழில் 'செல்லமே' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விஷால், ஆறடி உயரம் ஆக்ரோஷமான பாடி லேங்குவேஜ்ஜுடன், கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து லிங்குசாமி இயக்கிய 'சண்டக்கோழி' திரைப்படம், விஷாலை முன்னணி நட்சத்திரமாக அடையாளம் காட்டியது. தொடர்ந்து பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தில் நடித்து, வெரைட்டியாக மாஸ் காட்டினார். மேலும், தயாரிப்பாளராகவும் வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

விஷாலின் 45வது பிறந்தநாள்
இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சுலர் பாயாக வலம் வரும் விஷால், இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு விஷாலுக்கு, திரை பிரபலங்களும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்து வரும் 'மார்க் ஆண்டனி' படத்தின் முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்தப் படத்தில், எஸ்ஜே சூர்யா வில்லனாக நடித்து வருகிறார்.

மிரட்டும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
மார்க் ஆண்டனி படத்தில் விஷால் இதுவரை நடித்திராத வித்தியாசமான ரோலில் நடிப்பதாக சொல்லப்பட்டது. அதை நிரூபிக்கும் வகையில் செம்ம மாஸாக வெளியாகியுள்ள மார்க் ஆண்டனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர். அடர்த்தியான முடி, அதிகமான தாடி என வித்தியாசமான லுக்கில் இருக்கும் விஷால், கையில் துப்பாக்கியுடன் ஆக்ரோஷமாக போஸ் கொடுத்துள்ளார். போஸ்டர் முழுவதும் துப்பாக்கிகளாக இருப்பதும், படம் மிரட்டலான கேங்ஸ்டர் கதைக்களமாக இருக்கும் என லீட் கொடுத்துள்ளது. இன்னொரு சாயலில் பார்க்கும் போது விஷால், கைதி படத்தின் கார்த்தி மாதிரியே தோற்றமளிக்கிறார்.

வில்லனாக எஸ்ஜே சூர்யா
விஷால் ஜோடியாக ரித்து வர்மா நடித்து வரும் மார்க் ஆண்டனி படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். அதேபோல், வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஷால், எஸ்ஜே சூர்யா இருவருமே இரட்டை வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஆதிக் ரவிச்சந்திரன், 'மார்க் ஆண்டனி' படத்தை இயக்குகிறார். முன்னதாக இந்தப் படத்தின் கதை குறித்து நடிகர் எஸ்ஜே சூர்யா ரொம்பவே பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது வெளியான மார்க் ஆண்டனி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், விஷால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











