V SHALL... விஷாலின் புதிய மனிதாபிமான செயலி!
உலகில் எவ்வளவோ ஏழை எளிய மாணவ மாணவிகள், வயதானோர், குழந்தைகள் ஆகியோர் கல்வி, மருத்துவம் போன்ற அடிப்படை தேவைகளுக்கே உதவ யாரும் இல்லாமல் தவித்து வருகிறார்கள்.
இது போன்ற மக்களுக்கு உதவ பல நல்ல உள்ளங்களும் உள்ளனர். இது போன்று உதவி தேவைப்படுவர்களையும் உதவி செய்ய காத்து கொண்டிருப்பவர்களையும் இணைப்பதற்காகவே நடிகர் சங்க செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் V SHALL என்ற புதிய செயலி (App) ஒன்றை உருவாக்கி உள்ளார்.

இதன் மூலமாக உண்மையாகவே உதவி தேவைப்படுபவர்களும் உதவ முன் வருபவர்களும் நேரிடையாக சந்தித்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த அப்ளிகேஷன் டிசம்பர் இரண்டாம் வாரத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என விஷால் அறிவித்துள்ளார்.
Vishal என்ற தன் பெயரையொட்டியே V SHALL (நம்மால் முடியும்) என அந்த செயலிக்கு பெயர் சூட்டியுள்ளது சுவாரஸ்யமானது.


Click it and Unblock the Notifications











