அட்டகாசமாக வெளியிடப்பட்ட விஷாலின் புதிய பட அறிவிப்பு

சென்னை : நடிகர் விஷால், தற்போது தானே இயக்கி நடிக்கும் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் டைரக்டர் ஆனந்த் ஷங்கர் இயக்கும் எனிமி படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடித்து வருகிறார்.

Vishals new movie announced with a novel motion poster

இந்நிலையில் விஷாலின் புதிய படமான விஷால் 31 படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Not a Common Man (சாதாரண மனிதன் அல்ல) என்ற வாசகத்துடன் இப்படத்தின் நாவல் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.இதில் ஹைலைட் என்னவென்றால், இந்த போஸ்டரில் விஷாலின் முகம் சாதாரண மனிதனை போலவும், கண்கள் மட்டும் சிறப்பு நிறத்தில், தவறுகளுக்கு எதிராக கோபத்தை வெளிப்படுத்தும் ஹீரோ போன்று சித்தரிப்பதாகவும் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விஷால் 31 படத்தை து.பா.சரவணன் இயக்குகிறார். இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபோக்ட்டரி தான் பிரம்மாண்ட பட்ஜெட்டில் இப்படத்தை தயாரிக்கிறது. படத்தில் பணியாற்றும் மற்ற கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Read more about: vishal விஷால்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X