லத்தி படத்தில் முரட்டுத்தனமாக உடம்பை ஏற்றியிருக்கும் விஷால்..எப்படி இருக்காரு பாருங்க!
சென்னை : வீரமே வாகை சூடும் படத்திற்கு பிறகு நடிகர் விஷாலின் நடிப்பில் உருவாகி வருகிறது லத்தி.
இந்தப் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். படத்தின் இறுதிக்கட்ட சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் நடிகை சுனைனா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால் சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். எனிமி, வீரமே வாகை சூடும் என அடுத்தடுத்த படங்கள் அவரது நடிப்பில் வெளியாகின. இதில் ஆர்யாவுடன் அவர் நடித்திருந்த எனிமி படம் சிறப்பான விமர்சனங்களை பெற்றது. ஆனால் வீரமே வாகை சூடும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

லத்தி படம்
இந்நிலையில் விஷால் நடிப்பில் அடுத்ததாக லத்தி படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கான பைட் சீன்களை இயக்குநர் வினோத்குமார் எடுத்து வருகிறார். விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளது.

முக்கிய கேரக்டரில் பிரபு
இந்தப் படத்தில் நடிகை சுனைனா விஷாலுக்கு ஜோடியாகியுள்ளார். இவர்கள் இருவரும் முன்னதாக ஒரு படத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தில் காவல் அதிகாரியாக விஷால் நடித்து வருகிறார். நடிகர் பிரபுவும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார்.

12வது முறையாக இணைந்த கூட்டணி
இந்தப் படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து வருகின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின்மூலம் விஷால் -யுவன் கூட்டணி 12வது முறையாக இணைந்துள்ளது. வழக்கமான விஷால் படங்களை போலவே இந்தப் படமும் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. படத்திற்கு பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைத்துள்ளார்.

பேஸ்புக்கில் வீடியோ
இதுகுறித்த வீடியோ ஒன்றையும் முன்னதாக விஷால் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது. விஷால் நடிப்பில் வெளியாகும் முதல் பான் இந்தியா படமாக இந்தப்படம் உள்ளது.

விஷால் புதிய புகைப்படம்
இந்நிலையில் தற்போது தன்னுடைய பேஸ்புக்கில் விஷால் புதிய படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். தொடர்ந்து வொர்க் அவுட் செய்வதாகவும் லத்தி படத்தின் இறுதிக்கட்ட சண்டைக் காட்சிகளுக்காக தயாராகி வருவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார். இந்தப் படத்தில் உடம்பை ஏற்றி மிகவும் சிறப்பாக காணப்படுகிறார் விஷால்.


Click it and Unblock the Notifications











