விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் டைட்டில் இதுதான்.. என்ன கேரக்டர் தெரியுமா?
சென்னை : விஷால் நடிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 'இரும்புத்திரை' திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை அடுத்து லிங்குசாமி இயக்கிவரும் 'சண்டக்கோழி 2' படத்தில் நடித்து வருகிறார் விஷால். விஷாலின் அடுத்த படத்திற்கு 'அயோக்யா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
'சண்டக்கோழி 2' படத்திற்குப் பிறகு, தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த 'டெம்பர்' படத்தின் தமிழ் ரீமேக்கில் விஷால் நடிக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸின் இணை இயக்குநரான வெங்கட்மோகன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.

தெலுங்கில் வெளியான 'டெம்பர்' படத்தில் ஜூனியர் என்.டி.ஆர், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 2015-ம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் இந்தி ரீமேக்காக உருவாகும் 'சிம்பா' படத்தில் ரன்வீர் சிங், சாரா அலிகான் ஆகியோர் நடிக்கின்றனர்.
தமிழில் ரீமேக் ஆகும் 'டெம்பர்' படத்தில் விஷால் ஹீரோவாகவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் நடிக்கவுள்ளனர்.இந்தப் படத்தை லைட் அவுஸ் மூவிமேக்கர்ஸ் நிறுவனம் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியோடு இணைந்து தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கவுள்ளார்.
இந்தப் படத்திற்கு 'அயோக்யா' என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஜூனியர் என்.டி.ஆர் நடித்த போலீஸ் வேடத்தில் நடிக்கவிருக்கிறார் விஷால். விஷால் ஏற்கெனவே, 'சத்யம்', 'வெடி', 'பாயும் புலி' ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











