ரஜினி தலைப்பை விடாத ஹீரோக்கள்... 'நான் சிகப்பு மனிதன்' தலைப்பில் விஷால்!

By Shankar

சென்னை: விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு ரஜினியின் நான் சிகப்பு மனிதன் என்ற தலைப்பைச் சூட்டியுள்ளனர்.

ரஜினி - பாக்யராஜ் நடித்து, எஸ் ஏ சந்திரசேகரன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படம் நான் சிகப்பு மனிதன்.

இந்தப் படத்தையும் அதன் தலைப்பையும் ரீமேக் செய்து, அதில் விஜய்யை நடிக்க வைக்கப் போவதாக எஸ் ஏ சந்திரசேகரன் சொல்லிக் கொண்டிருந்தார்.

விஷால் - யுடிவி

விஷால் - யுடிவி

ஆனால் சத்தமில்லாமல் இந்தப் பெயரை பதிவு செய்துவிட்டார்கள் யுடிவிகாரர்கள், விஷாலுக்காக.

இந்தப் படத்தில் விஷால் கதாநாயகனாக நடிப்பதுடன், தன் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியையும் யூடிவி யுடன் இணைத்துக் கொண்டு தயாரிப்பிலும் பங்கேற்கிறார்.

லட்சுமி மேனன்

லட்சுமி மேனன்

விஷாலுடன் திரையில் இணைந்து நடிக்க இருக்கிறார் லட்சுமி மேனன். படத்தின் கதையை எழுதி இயக்குகிறார் திரு. இவர் விஷாலை வைத்து ஏற்கெனவே 'சமர்' படம் இயக்கியவர். 'நான் சிகப்பு மனிதன்'ஒரு முழுநீள ரொமான்டிக் ஆக்ஷன் த்ரில்லராக இருக்கும்.

நவம்பர் 3 வது வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்கி ஒரே ஷெட்யூலில் படத்தை முடித்து 2014 சம்மர் சீசனில் வெளியிடத் திட்டம்.

தலைப்பு

தலைப்பு

'நான் சிகப்பு மனிதன்' 1985ல் வெளியான படம். சூப்பர் ஸ்டார் ரஜினி நாயகனாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம். கதைக்குப் பொருத்தமாக இருந்ததால் அந்த தலைப்பைக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தியுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பில் கூறியுள்ளனர்.

"இயக்குநர் கூறிய கதை பிடித்ததால் இந்தப் படம் திட்டமிப் பட்டது. இது நிச்சயமாக விஷாலுக்கு மிக முக்கிய படமாக இருக்கும்.எதிர்பாராத படமாகவும் இருக்கும்." என்கிறார் யூடிவியின் தென்னிந்திய தலைமை நிர்வாகி ஜி.தனஞ்ஜெயன்.

விஷால் மகிழ்ச்சி

விஷால் மகிழ்ச்சி

படம் பற்றி விஷால் கூறும் போது, ''இந்தப் பட கூட்டணி பற்றி மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் 2வது படமே யூடிவியுடன் இணைவதில் பெருமை. அனைவரது அன்பாலும் ஆதரவாலும் படம் சிறப்பாக வருமென்று நம்புகிறேன்," என்கிறார்.

அருமையான குழு - திரு

அருமையான குழு - திரு

இயக்குநர் திரு கூறும் போது, "நான் இந்தப் படக்குழு பற்றி பெருமைப் படுகிறேன். யூடிவி யாகட்டும் விஷால் ஃபிலிம் ஃபேக்டரியாகட்டும் குழுவில் உள்ள ஒவ்வொருவருமே குழுவின் பலம் என்று சொல்லும்படி இருப்பது சிலிர்ப்பாக இருக்கிறது. எனக்கு தனிப்பட்ட முறையில் இது வியப்பும் ஊக்கமும் அளிக்கிற படக்குழு என்று பெருமிதமாகக் கூறுவேன். இந்த அருமையான குழுவினருடன் இணைந்து இயங்கப் போகிற நாட்களுக்காக, அந்த அனுபவங்களுக்காக காத்திருக்கிறோம், "என்கிறார்.

கலைஞர்கள்

கலைஞர்கள்

படத்துக்கு ஒளிப்பதிவு.-ரிச்சர்ட் எம்.நாதன், இசை -எஸ்.எஸ் தமன், பாடல்கள்-மதன் கார்க்கி, எடிட்டிங் -அந்தோனி எல். ரூபன், ஆர்ட்- ஜாக்கி.,தயாரிப்பு- ரோனி ஸ்க்ருவாலா- சித்தார்த் ராய் கபூர்-விஷால். விரைவில் 'நான் சிகப்பு மனிதன்' படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X