twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மன்னிப்பு கேட்காவிட்டால் விஷால் படங்களுக்கு ஒத்துழைப்பு கிடையாது- தயாரிப்பாளர்கள் சங்கம் கெடு

    |

    சென்னை: தயாரிப்பாளர்கள் சங்கம் பற்றி அவதூறு கருத்து கூறிய நடிகர் விஷால் ஒரு வாரத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிட்டால் அவருடைய படங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கமாட்டோம் என தயாரிப்பாளர்கள் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    நடிகர் விஷால் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், "தயாரிப்பாளர்கள் நஷ்டம் அடைவதற்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தான் காரணம். திருட்டு வி.சி.டி.யை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஆக்கப்பூர்வமான வேலைகள் எதுவும் நடக்கவில்லை. எப்படி நடிகர் சங்கத்தை கையில் எடுத்தோமோ? அதேபோல், ஜனவரியில் நடக்க இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலிலும் போட்டியிடுகின்ற சூழல் எங்களுக்கு வந்துள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.

    விஷாலின் இந்தப் பேட்டி தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.

    அவசரக் கூட்டம்...

    அவசரக் கூட்டம்...

    இந்நிலையில், தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர கூட்டம் சென்னை அண்ணாசாலையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கில் சங்கத் தலைவர் எஸ்.தாணு தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது.

    விவாதம்...

    விவாதம்...

    இந்தக் கூட்டத்தில் விஷால் கூறிய கருத்து தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது இது தொடர்பாக அவருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என தயாரிப்பாளர்களில் பலர் வற்புறுத்தினார்.

    மன்சூர் ஆதரவு...

    மன்சூர் ஆதரவு...

    ஆனால், நடிகர் மன்சூர் அலிகான் விஷால் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். இதனால், அவரது மைக்கை துண்டித்து, மற்ற தயாரிப்பாளர்கள் அவரை முற்றுகையிட்டனர். இதனால் சிறிது நேரம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர், மன்சூர் அலிகான் பேசாமல் உட்கார்ந்துவிட்டார்.

    ஒரு வார கெடு...

    ஒரு வார கெடு...

    அதனைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் சங்கம் பற்றி அவதூறு பேசியதற்காக நடிகர் விஷால் மீது நடவடிக்கை எடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், இன்னும் ஒரு வார காலத்திற்கு தனது பேச்சிற்கு விஷால் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், இல்லையென்றால் அவரது படங்களுக்கு இனி ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கத்தி சண்டை தவிர்த்து...

    கத்தி சண்டை தவிர்த்து...

    இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விபரம் பின்வருமாறு:
    நமது சங்க உறுப்பினர் நடிகர் விஷால் ஒரு வார பத்திரிகையில் நமது தயாரிப்பாளர்கள் சங்கத்தினை அவமரியாதை செய்யும் வகையில் பேட்டியளித்துள்ளார். அதனை இந்த ஆலோசனை கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. அதன் அடிப்படையில், இன்றில் இருந்து ஒரு வார காலத்துக்குள் விஷால் தனது பேட்டிக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும். அப்படி தவறும்பட்சத்தில் தீபாவளி வெளியீடாக அறிவித்துள்ள ‘கத்தி சண்டை' திரைப்படம் தவிர்த்து மற்ற அவர் நடிக்கும் எந்த தமிழ் திரைப்படங்களுக்கும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கமும், தயாரிப்பாளர்களும் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    டெலிகாஸ்ட்...

    டெலிகாஸ்ட்...

    கடந்த காலங்களில் கூட்டமைப்புடன் கலந்து பேசி எடுத்த முடிவின்படி, எதிர்வரும் காலங்களில் திரைப்படத்தின் ‘சேட்டிலைட்' உரிமை விற்பனை ஆகாத காரணத்தினால் இனிவரும் காலங்களில் சேட்டிலைட் ஒளிபரப்பை ‘டெலிகாஸ்ட்' அடிப்படையில் ஒளிபரப்புவது என்று தீர்மானிக்கப்படுகிறது.

    சம்பளத்தில் குறைப்பு...

    சம்பளத்தில் குறைப்பு...

    பெருகிவரும் தயாரிப்பு செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில், 50 லட்சத்துக்கும் மேல் சம்பளம் வாங்கும் நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோர் 30 சதவீதம் அவர்களுடைய சம்பளத்தில் குறைத்து கொள்ள வேண்டும் என்று இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.

    சிறு முதலீட்டு படங்கள்...

    சிறு முதலீட்டு படங்கள்...

    சிறு முதலீட்டு திரைப்படங்களை குறிப்பிட்ட நாட்களில் வெளியிடுவதற்காக தயாரிப்பாளர்களுக்கு விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்' என இந்த தீர்மானங்கள் அப்போது நிறைவேற்றப்பட்டன.

    English summary
    Actor Vishal’s recent interview with a leading Tamil magazine about the Producers’ Council and its members, has created a new controversy. He had said that the Council had taken no active measures to curb piracy, or tackle the problems of satellite rights.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X