சிம்பு மீது என்ன நடவடிக்கை? விஷால் பரபரப்பு பேச்சு!
Recommended Video

சென்னை: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அளித்த புகாரில் சிம்பு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பதில் அளித்துள்ளார்.
சென்னையில் நேற்று நடந்த கீ பட விழாவில் சிம்பு விவகாரம் பற்றி பிரச்சினை கிளப்பப்பட்டது. விழாவில் தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் பேசும்போது, "சிம்புவுக்கு எதிராக மைக்கேல் ராயப்பன் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்து இருக்கிறார். இந்த புகார் மீது விஷால் நடவடிக்கை எடுக்கவில்லை. விஷாலும், சிம்புவும் சேர்ந்து இருக்கும் படங்கள் மட்டும் வெளிவருகின்றன," என்றார்.

இதனால் விழாவில் சலசலப்பு ஏற்பட்டது. தேனப்பன் பேச்சுக்கு விஷால் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து குரல் எழுப்பினார்கள்.
இதைத்தொடர்ந்து தேனப்பன் புகாருக்கு பதிலளிக்கும் விதமாக விஷால் பேசியதாவது:
"சிம்பு மீது மைக்கேல் ராயப்பன் புகார் அளித்து இருந்தார். அந்த புகாருக்கு சிம்புவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால் சிம்பு இதுவரை பதில் சொல்லவில்லை. அவர் விளக்கம் கொடுத்தால்தானே நடவடிக்கை எடுக்க முடியும். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
இந்த பிரச்சினையில் நல்லது நடக்கும். பொறுமை அவசியம். தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து நல்லது செய்வோம்.
திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணத்தை அரசு குறைத்து இருக்கிறது. ஆனால் பல தியேட்டர்கள் அதை நடைமுறைப்படுத்தாமல் இருக்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்," என்றார்.


Click it and Unblock the Notifications











