நடிகர் சங்க நிலம் மீட்பு; சின்னத்திரை தொடர் தயாரிப்பு- 42 வாக்குறுதியுடன் விஷால் அணி தேர்தல் அறிக்கை
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் அணியினரின் தேர்தல் அறிக்கை 42 வாக்குறுகளுடன் இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்தல் அறிக்கையை நடிகர் சிவகுமார் வெளியிட நடிகை சச்சு பெற்றுக் கொண்டார்.
தேர்தல் அறிக்கை குறித்து நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் நடிகர் நாசர் மேடையில் விளக்கினார். விஷால் ஆதரவாளர்களின் மத்தியில் இந்தத் தேர்தல் அறிக்கை வெளியானது.
நாங்கள் சங்கத்திற்கு வந்தால் யார் வேண்டுமானாலும் எங்களிடம் கணக்கு கேட்கலாம் என்று நாசர் உறுதி அளித்தார். தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கியமான அம்சங்கள்:

*நாடக நடிகர்களுக்கு உடை, மேக்கப் சாதனம் இலவசமாக வழங்கப்படும்.
*நடிகர் சங்க நிர்வாகத்தில் இருந்த தவறுகள் சரி செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
*சட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும் நடிகர் சங்க நிலத்தை மீட்போம்.
*வெளியூர் நாடக நடிகர்கள் சென்னையில் தங்க வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
*நடிகர் சங்க கணக்கு தணிக்கை செய்யப்படும்.

*நடிகர் சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களின் குழந்தைகள் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுத்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும்.மேற்படிப்பிற்கும் உதவி செய்யப்படும்.
*சங்கத்தில் உள்ள நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்களுக்கு பரிந்துரை செய்யப்படுவர்.
*நாடக நடிகர்கள், திரைப்பட நடிகர்களுக்கு இலவச காப்பீடு வழங்கப்படும்.
*நடிகர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும்.
*நடிகர் சங்க இணையதளம் உருவாக்கப்படும்.

*நாடக நடிகர்களுக்கு சுவாமி சங்கரதாஸ் பெயரில் விருது வழங்கப்படும்.
*நடிகர் சங்கத்தில் குறைந்த விலையில் உணவகம் ஒன்று உருவாகப்படும்.
*நடிகர் சங்கம் மூலம் சின்னத்திரை தொடர்கள் எடுத்து சங்க வருமானத்திற்கு வழிவகை செய்யப்படும்.
*தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.
*செயற்குழு, பொதுக்குழு ஒப்புதலோடு எஸ்பிஐ ஒப்பந்தத்தை ரத்து செய்வோம்.

*நாடகம் இல்லாத சமயங்களில் நாடக நடிகர்களுக்கு சினிமா வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும்.
*நடிகர் சங்கத்தில் கேமரா, எடிட்டிங், இசைக் கோப்பு கொண்ட திரைப்படப் பிரிவு உருவாக்கப்படும்.
*சங்கத்துக்கு மாதம் 30 லட்சத்திற்கு அதிகமாக வருமானம் வர வழிவகை செய்யப்படும்.
இவ்வாறு தங்கள் தேர்தல் அறிக்கையில் நடிகர் விஷால் அணியினர் வாக்குறுதி அளித்து தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றனர். இந்த விழாவில் ஏராளமான நடிகர்கள் கலந்து கொண்டு விஷால் அணியினருக்கு ஆதரவளித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











