ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே பட்ஜெட் பஞ்சாயத்தாம்... விஷால் படத்துக்கு என்னாச்சு?
சென்னை: விஷால் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே பட்ஜெட் பிரச்னையில் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர் விஷால், இப்போது மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதில் பிரசன்னா, ரகுமான், கவுதமி முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
இதன் ஷூட்டிங் லண்டனில் நடந்து வந்தது. அடுத்து சென்னையில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.

ராணுவ அதிகாரி
இதற்கிடையே அவர் எம்.எஸ் ஆனந்தன் இயக்கும் 'சக்ரா' படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ஸ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா காஸன்ட்ரா ஆகியோர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். மனோபாலா, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இதன் ஷூட்டிங் வேகமாக நடந்து வருகிறது.

விஷால் பிலிம்பேக்டரி
இந்தப் படத்தையும் மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் 2 படத்தையும் நடிகர் விஷால், தனது விஷால் பிலிம்பேக்டரி சார்பில் தயாரித்து வருகிறார். இந்நிலையில், ஆனந்த் ஷங்கர் இயக்கும் படத்திலும் நடிகர் விஷால் நடிப்பதாகக் கூறப்பட்டது. அவர், இதற்கு முன் விக்ரம் பிரபு நடித்த அரிமாநம்பி, விக்ரம், நயன்தாரா நடித்த இருமுருகன், விஜய் தேவரகொண்டா, மெஹ்ரின் நடித்த நோட்டா ஆகிய படங்களை இயக்கியவர்.

வில்லனாக ஆர்யா
அவர் கதையை கேட்ட விஷால், நடிக்கலாம் என்று படத்தின் பட்ஜெட் எவ்வளவு என்று கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் விஷால் ஜோடியாக ரிது வர்மா, வில்லனாக ஆர்யா நடிப்பதாகக் கூறப்பட்டது. தமன் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்ததாகக் கூறப்பட்டது. படத்தை நடிக்க விஷாலே தயாரிக்க இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்துக்கான பட்ஜெட்டை சமீபத்தில் விஷாலிடம் கொடுத்தாராம் ஆனந்த் ஷங்கர்.
Recommended Video

அதிகமான பட்ஜெட்
இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டுமாம். அதோடு பட்ஜெட், இவர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது. அந்த கதைக்கு அவ்வளவு பட்ஜெட் தேவை எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே 2 படங்களை தயாரித்து வரும் விஷால், இதையும் அதிக பட்ஜெட்டில் தயாரித்தால் சிக்கலாகி விடும் என்பதால், அந்தப் படத்துக்கு வேறு தயாரிப்பாளரை தேடி வருவதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











