twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    1500 தியேட்டரில் ரிலீஸ் செய்தும் கலெக்‌ஷன் வரலையே.. வீரமே வாகை சூடும் வசூல் எவ்வளவு தெரியுமா?

    |

    சென்னை: நடிகர் விஷாலின் வீரமே வாகை சூடும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான நிலையில், அதன் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்தியா முழுவதும் மொத்தமாக 1500 திரையரங்குகளிலும் உலகம் முழுக்க 2000 திரையரங்குகளிலும் விஷாலின் வீரமே வாகை சூடும் பிப்ரவரி 4ம் தேதி வெளியானது.

    ஆனால், இன்னமும் மக்கள் திரையரங்கை நோக்கி படையெடுக்கும் சூழல் உருவாகவில்லை என்பது தற்போது வெளியாகி உள்ள வசூல் மூலம் தெளிவாகி உள்ளது.

    டிராமா பண்றேனா? பாலாஜி முருகதாஸிடம் எகிறிய ஜூலி.. வெடித்தது சண்டை.. கண்ணீர் காட்சிகள் ஆரம்பம்!டிராமா பண்றேனா? பாலாஜி முருகதாஸிடம் எகிறிய ஜூலி.. வெடித்தது சண்டை.. கண்ணீர் காட்சிகள் ஆரம்பம்!

    விஷால் படம்

    விஷால் படம்

    விஷாலின் சக்ரா படம் சொதப்பிய நிலையில், தீபாவளிக்கு அண்ணாத்த படத்துடன் போட்டியாக வெளியான எனிமி திரைப்படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பொங்கலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட வீரமே வாகை சூடும் திரைப்படம் பிப்ரவரி 4ம் தேதி அதிகபட்சமான திரையரங்குகளில் மிகப்பெரிய ரிலீசாக வெளியானது.

    பார்க்க ஆளில்லை

    பார்க்க ஆளில்லை

    பாசிட்டிவ் விமர்சனங்கள் மற்றும் குறைந்த அளவிலான நெகட்டிவ் விமர்சனங்களே இந்த படத்திற்கு வந்திருந்தன. இருந்தபோதிலும், தியேட்டருக்கு சென்று விஷாலின் வீரமே வாகை சூடும் படத்தை பார்க்க மக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டவில்லை என ரிப்போர்ட்டுகள் தெரிவிக்கின்றன.

    தமிழ்நாடு வசூல்

    தமிழ்நாடு வசூல்

    முதல் நாளில் தமிழ்நாடு முழுவதும் விஷாலின் வீரமே வாகை சூடும் படம் வெறும் 1.49 கோடி மட்டுமே வசூல் ஈட்டியுள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் டிராக்கர்கள் தற்போது தகவல் தெரிவித்துள்ளனர். அதிகாரப்பூர்வமாக விஷால் தரப்பில் இருந்து எந்தவொரு பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டும் தெரிவிக்கப்படவில்லை.

    பெரிய பாதிப்பு

    பெரிய பாதிப்பு

    அதிக அளவிலான திரையரங்குகளில் விஷால் படம் வெளியான நிலையில், கணிசமான தொகை வசூலாக வரும் என எதிர்பார்த்த நிலையில், வெறும் 1.49 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டிலே இந்த நிலைமை என்றால் இந்தியா மற்றும் உலகளவிலான பாக்ஸ் ஆபிஸ் குறித்து சொல்லவே வேண்டாம்.

    Recommended Video

    Veerame Vaagai Soodum | Dimple Hayathi | Vishal Sir தான் என்னுடைய Inspiration | Filmibeat Tamil
    வலிமை வந்தால் தான்

    வலிமை வந்தால் தான்

    விஷாலின் புதிய படமாவது திரையரங்குகளுக்கு மக்கள் கூட்டத்தை கொண்டு வரும் என எதிர்பார்த்த திரையரங்க உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சியுள்ளன. நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படம் வரும் பிப்ரவரி 24ம் தேதி வெளியானால் தான் ரசிகர்களையும் பொதுமக்களையும் தியேட்டரை நோக்கி அது அழைத்து வரும் என காத்திருக்கின்றனர்.

    English summary
    Actor Vishal’s Veeramae Vaagai Soodum first day Box office Report is here. This films which releases in many theaters not able to pull the audience.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X