ரிலீஸ் தேதி மாற்றம்...முன் கூட்டியே ரிலீசாகும் விஷாலின் வீரமே வாகை சூடும்...இது தான் காரணமா ?

சென்னை : விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. எதிர்பார்க்கப்பட்டதை விட முன்பே படத்தை படக்குழு ரிலீஸ் செய்ய உள்ளது.

து.பா.சரவணன் எழுதி, இயக்கி, விஷால் நடத்துள்ள படம் வீரமே வாகை சூடும். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தை விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ளது. டிம்பிள் ஹயாதி லீட் ரோலில் நடித்துள்ள இந்த படத்தில் யோகிபாபு, பாபுராஜ் ஆகியோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ரிலீஸ் தேதி மாற்றம்

ரிலீஸ் தேதி மாற்றம்

முதலில் 2021 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்த இந்த படம், பிறகு 2022 ம் ஆண்டு ஜனவரி 26 ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது இதை மாற்றி பொங்கல் தினமான ஜனவரி 14 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபஸ்ட் சிங்கிளாக தீம் மியூசிக்

ஃபஸ்ட் சிங்கிளாக தீம் மியூசிக்

விஷாலின் 31 வது படமான வீரமே வாகை சூடும் படத்தின் டைட்டில் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது கடந்த ஆண்டு மே மாதம் துவக்கப்பட்ட இந்த படம் திட்டமிட்டபடி எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிளான Rise of a common man தீம் மியூசிக் டிசம்பர் 22 ம் தேதி வெளியிடப்பட்டது. பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதி உள்ளார்.

11 வது முறையாக கூட்டணி

11 வது முறையாக கூட்டணி

சண்டைக்கோழி, திமிரு, தாமிரபரணி உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து விஷாலுடன், யுவன்சங்கர் ராஜா கூட்டணி அமைத்துள்ள 11 வது படம் வீரமே வாகை சூடும். இதனால் விஷாலின் மற்றொரு மாஸ்டர் பீஸ் படமாக இந்த படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொங்கல் ரேசில் விஷால் படம்

பொங்கல் ரேசில் விஷால் படம்

அஜித் நடித்த வலிமை படம் ஜனவரி 13 ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், அடுத்த நாளே வீரமே வாகை சூடும் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதால் அது படத்தின் வசூலை பாதிக்காதா என பலர் கேள்வி கேட்டு வருகிறார்கள். ஒமைக்ரான் பரவல் காரணமாக பல படங்கள் பொங்கல் ரேசில் இருந்து விலகியதால் அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள படத்தை முன் கூட்டியே ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இது தான் காரணமா

இது தான் காரணமா

தியேட்டர்களில் தற்போது 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக எந்த நேரத்திலும் எந்த உத்தரவு வேண்டுமானாலும் வரலாம் என்பதால் அவசர அவசரமாக படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X