விஷாலின் கிறிஸ்துமஸ் ட்ரீட்... வீரமே வாகை சூடும் படத்தின் டீசர் வெளியீடு!
சென்னை : நடிகர் விஷால் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் வீரமே வாகை சூடும்.
இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ள நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
படத்தின் டீசர் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறப்பாக அமைந்துள்ளது.

விஷாலின் எனிமி படம்
நடிகர் விஷால் -ஆர்யா நடிப்பில் தீபாவளிக்கு வெளியானது எனிமி. இந்தப் படம் அண்ணாத்த படத்துடன் சேர்ந்து ரிலீசான நிலையில், சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்றுள்ளது. விஷால், ஆர்யா இருவரும் போட்டிப் போட்டு நடித்திருந்தனர்.

வீரமே வாகை சூடும் படம்
அடுத்தடுத்து லத்தி உள்ளிட்ட படங்களில் விஷால் நடித்து வருகிறார். லத்தி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தன்னுடைய விஷால் பிலிம் பேக்டரி சார்பில் வீரமே வாகை சூடும் படத்தை அவர் தயாரித்துள்ளார்.

ஜனவரி 26ல் வெளியீடு
இந்தப் படம் ஜனவரி 26ம் தேதி உலகமெங்கிலும் ரிலீசாக உள்ளது. அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் டிம்பிள் ஹயாத்தி, ரவீனா ரவி, யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
டீசர் வெளியீடு
படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்துமஸ் ட்ரீட்டாக படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்பட்டுள்ளது. மிரட்டலான வகையில், ரசிகர்களை வெகுவாக கவரும்வண்ணம் இந்த டீசர் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கில் ரிலீஸ்
தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் படம் ரிலீசாக உள்ள நிலையில் தற்போது டீசரும் இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சாமானியர்கள் மற்றும் அவர்களை உபயோகிக்க நினைப்பவர்கள் என்பவர்கள் குறித்து டீசரில் பேசுகிறார் விஷால்.


Click it and Unblock the Notifications











