வழிவிட்ட பெரிய பட்ஜெட் படங்கள்... பொங்கல் ரிலீசுக்கு தயாராகும் விஷால், சசிக்குமார் படங்கள்

சென்னை : தமிழகத்தில் ஓமிக்ரான், கொரோனா உள்ளிட்டவை மீண்டும் தலைத்தூக்கியுள்ள நிலையில், 50 சதவிகித ரசிகர்களுடன் திரையரங்குகள் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பொங்கலுக்கு வெளியாக இருந்த வலிமை, ராதே ஷ்யாம் மற்றும் ஆர்ஆர்ஆர் படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்கள் பொங்கல் ரேசில் பங்கேற்க தயாராகி வருகின்றன.

பொங்கல் பண்டிகை

பொங்கல் பண்டிகை

தீபாவளி, பொங்கல் பண்டிகைகளில் சிறப்பான பல படங்கள் குறிப்பாக பெரிய நடிகர்களின், பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசாவது வழக்கம். இவர்களுக்கு எந்த விதமான அறிமுகமும் தேவையில்லை என்றாலும் இத்தகைய பண்டிகைகளை இவர்களது படங்கள் பிடித்து விடுகின்றன.

நீண்ட நாள் கோரிக்கை

நீண்ட நாள் கோரிக்கை

இந்த பண்டிகைகளின்போது சிறிய பட்ஜெட் படங்களை ரிலீஸ் செய்தால், அந்தப் படங்களுக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என்பது நீண்ட கால கோரிக்கையாக உள்ளது. ஏனென்றால் பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாவது ரசிகர்களுக்கு திருவிழா கொண்டாட்டத்தை சாதாரணமாக கொடுத்துவிடும்.

விலகிய பெரிய பட்ஜெட் படங்கள்

விலகிய பெரிய பட்ஜெட் படங்கள்

இந்நிலையில் தற்போது ஓமிக்ரான் மற்றும் கொரோனா காரணமாக பெரிய பட்ஜெட் மற்றும் பெரிய ஹீரோக்களின் படங்கள் பொங்கல் பந்தயத்தில் இருந்து விலகியுள்ளன. காரணம் எதுவாக கூறப்பட்டாலும் திரையரங்குகளில் 50 சதவிகித ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி என்பது முக்கிய காரணம்.

ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு

இந்நிலையில் அஜித்தின் வலிமை, பிரபாசின் ராதே ஷ்யாம், மற்றும் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் நடிப்பில் ராஜமௌலி இயக்கியுள்ள ஆர்ஆர்ஆர் படங்களின் ரிலீஸ் இத்தகைய கட்டுப்பாடுகளை அடுத்து தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

ரிலீசுக்கு தயாராகும் சிறிய பட்ஜெட் படங்கள்

ரிலீசுக்கு தயாராகும் சிறிய பட்ஜெட் படங்கள்

இந்நிலையில் அந்த இடத்தில் தற்போது சிறிய பட்ஜெட் படங்கள் புகுந்துள்ளன. இதில் விஷாலின் வீரமே வாகை சூடும் படம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து சசிக்குமார் நடிப்பில் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படமும் பொங்கல் பந்தயத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லைன் கட்டும் படங்கள்

லைன் கட்டும் படங்கள்

மேலும் சதீஷ் ஹீரோவாக நடிக்கும் நாய் சேகர் படமும் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது. விதார்த்தின் கார்பன் மற்றும் குக் வித் கோமாளி புகழ் அஸ்வினின் என்ன சொல்ல போகிறாய் படங்களும் லைன் கட்டியுள்ளன. பொங்கலுக்கு இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் மேலும் சில படங்களும் இந்த பந்தயத்தில் இணைய வாய்ப்புள்ளது.

Recommended Video

Technology இல்லாத காலத்துல எப்படி?? Vasantha Balan Speech in Chennai International Film Festival
வலிமை ரிலீசாக வாய்ப்பு?

வலிமை ரிலீசாக வாய்ப்பு?

இதனிடையே, ஓமிக்ரான் பரவலில் மாற்றங்கள் ஏற்பட்டு மீண்டும் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டால் மீண்டும் வலிமை படம் ரிலீசாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த பட்டியலில் மற்ற பெரிய பட்ஜெட் படங்களும் இணையலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X