மோகன்லாலிடம் திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்ட விஷால்: காரணம்...
Recommended Video

சென்னை: விஷால் மலையாள நடிகர் மோகன்லாலிடம் திரும்பத் திரும்ப மன்னிப்பு கேட்டுள்ளார்.
கோலிவுட், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் என்று பிசியாக இருக்கும் விஷால் அண்மையில் மலையாள திரையுலகம் பக்கமும் சென்று வந்தார்.
அவர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலின் வில்லன் படத்தில் வில்லனாக நடித்தார். படம் மற்றும் மோகன்லால் குறித்து விஷால் கூறியதாவது,

அன்பு
நான் மோகன்லாலின் குடும்பத்தில் ஒருவனாக உணர்ந்தேன். அவரும், அவரது குடும்பத்தாரும் மிகவும் அன்பாக பார்த்துக் கொண்டனர். அதை ஒருபோதும் மறக்க மாட்டேன்.

ஆக்ஷன்
கிளைமாக்ஸ் நெருங்கும் நேரத்தில் வந்த ஆக்ஷன் காட்சியில் நடிப்பது சவாலாக இருந்தது. அந்த காட்சியில் நடித்த நாளை மறக்கவே முடியாது. லால் சாரும், நானும் நேருக்கு நேர் மோத வேண்டும்.

மலையாளம்
மோகன்லால் சார் முன்பு நின்று கொண்டு நான் மலையாளத்தில் பேச வேண்டும். ஒரு பெரிய நடிகர் முன்பு நின்ற பயத்தை நான் மறைக்க வேண்டியதாக இருந்தது. ஏதோ இப்பொழுது தான் நடிக்க வந்தது போன்று உணர்ந்தேன்.

சாரி
என் இதயத்துடிப்பு வேகமாக இருந்தது. இந்த காட்சியை முடித்துவிட்டு ஓடிப் போய் கேரவனில் உட்கார வேண்டும் என்று இருந்தது. மோகன்லால் கண்ணை பார்த்து வசனம் பேசியது கஷ்டமாக இருந்தது. எத்தனையோ படங்களில் நடித்தும் எனக்கு வியர்த்துக் கொட்டியது. கிளைமாக்ஸ் காட்சியில் மோகன்லாலை அடித்ததற்காக அவரிடம் சாரி சாரி என்று பல முறை சொன்னேன் என்றார் விஷால்.


Click it and Unblock the Notifications











