மீண்டும் பைரசிக்கு எதிராக களமிறங்கிய விஷால்.. வீரமே வாகை சூடும் பட பைரசியை தடுக்க அதிரடி!
சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.
அந்த படத்தின் பைரசியை தடுக்க கடும் நடவடிக்கைகளை எடுக்கும் முயற்சியில் களமிறங்கி உள்ளார் நடிகர் விஷால்.
தியேட்டரில் வெளியாகும் படங்களின் பைரசி அன்றைய நாளிலேயே வெளியாகி திரைத்துறைக்கு மிகப்பெரிய பிரச்சனையை தொடர்ந்து கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

துணிந்து இறங்கிய விஷால்
தமிழ்நாட்டில் இன்னமும் தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கிடைக்காமல் 50 சதவீத இருக்கைகளுடனே இயங்கி வருகின்றன. ஆனால், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு நீங்கிய நிலையில், துணிச்சலுடன் தனது வீரமே வாகை சூடும் படத்தை திரையரங்குகளில் வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால்.

களைகட்டும் வெள்ளிக்கிழமை
கடந்த 2 ஆண்டுகளாகவே தியேட்டர் ஓனர்கள் வெள்ளிக்கிழமைகளில் புதிய பெரிய படங்கள் வெளியாகாமல் மிகப்பெரிய சோகத்தில் மிதந்து வரும் சூழலில், அவ்வப்போது ஒரு சில படங்கள் வெளியாகி தியேட்டர் ஓனர்களை வாழவைத்து வருகின்றன. இந்நிலையில், மீண்டும் விஷாலின் வீரமே வாகை சூடும் படம் இன்று வெளியாகி தியேட்டர்களில் வெள்ளிக்கிழமை களைகட்டி வருகிறது.

வீரமே வாகை சூடும்
விஷால் தயாரிப்பில் இயக்குநர் சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயாத்தி நடிப்பில் உருவாகி உள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் இன்று வெளியாகிறது. சண்டக்கோழி, தாமிரபரணி படங்களை போல இந்த படத்திலும் ஆக்ஷனில் அசத்தி உள்ளார் நடிகர் விஷால். டிரைலரே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பைரசியை ரிப்போர்ட் பண்ணுங்க
இந்நிலையில், தனது படத்தின் வெளியீட்டை முன்னிட்டு அந்த படத்தின் பைரசி லிங்க் பற்றி தகவல் தெரிந்தால் உடனடியாக ரிப்போர்ட் அடியுங்க என ட்வீட் போட்டுள்ளார் நடிகர் விஷால். மாஸ்பங்க் ஆன்டி பைரசி நிறுவனம் மூலமாக பைரசியை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவே திருட்டு விசிடிகளுக்கு எதிராக பாரீஸ் பஜாரில் விஷால் அதிரடி நடவடிக்கை எடுத்த நிலையில், மீண்டும் பைரசிக்கு எதிராக களமிறங்கி உள்ளார்.
Recommended Video

டென்ஷன் தரும் டெலிகிராம்
விஷாலின் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட விஷால் ரசிகர்கள் டெலிகிராமில் தான் ஏகப்பட்ட லிங்குகளும் மொத்த வீடியோவும் டவுன்லோடு செய்ய ஷேர் செய்யப்பட்டு வருகின்றன. அதை நீங்க கவனித்தாலே இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்றும் லிங்க் தெரிந்தால் உடனடியாக ரிப்போர்ட் செய்கிறோம் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications