twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல்வர் ஸ்டாலினுக்கு விஷால் திடீர் கடிதம்... அப்படி என்ன இருக்கு அந்த கடிதத்தில்?

    |

    சென்னை : நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான விஷால் இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். எதற்காக இந்த திடீர் கடிதம் என அனைவரும் கேட்டு வருகிறார்கள்.

    Vishal sent letter to Tamilnadu Chief Minister M.K.Stalin

    தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பொதுச் செயலாளர் ஆகி உள்ளார் விஷால். நடிகர் சங்கத்தின் புதிய உறுப்பினர்கள் பதவியேற்ற பிறகு தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து அனைவரும் வாழ்த்து பெற்றனர். இந்நிலையில் இன்று நடிகர் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச் செயலாளரான விஷால் முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    அந்த கடிதத்தில், நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும், தமிழ் திரையுலகையும் பிரிக்க முடியாது. வரிவிலக்கு முதல் பையனூரில் வீடு கட்ட இடம் வரை திரைத்துறையினர் ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்தார்.

     ரேவதிக்கு மாநில பிலிம் விருதைப் பெற்றுத் தந்த பூதகாலம் - படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்? ரேவதிக்கு மாநில பிலிம் விருதைப் பெற்றுத் தந்த பூதகாலம் - படத்தில் அப்படி என்ன ஸ்பெஷல்?

    தமிழ் திரையுலகை தாய் வீடாக நினைத்து வழி நடத்திய கலைஞர் அவர்களின் பெயரால் அவரது பிறந்தநாள் அன்று தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிர் கலைஞர் அவர்களின் பெயரால் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதும், ரூ.10 லட்சம் ரொக்க பணமும் மற்றும் நினைவுப் பரிசும் தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும் என்று அறிவித்த போதே அகமகிழ்ந்தோம்.

    அதற்கு ஒரு குழு அமைத்து அந்த குழுவின் தலைவராக மூத்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் அவர்களையும், உறுப்பினர்களாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் அவர்களையும் மற்றொரு உறுப்பினராக நடிகரும் இயக்குனருமான கரு.பழனியப்பன் அவர்களையும் நியமித்து ஆணை பிறப்பித்து நடிகர் சங்கத்துக்கு பெருமை சேர்த்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Vishal send thanking letter to Tamilnadu Chief Minister M.K.Stalin for giving award in the name of late CM Karunanidhi. For giving this award, CM formed a committe and appointed members for regulating the committe.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X