சுவர் ஏறிக் குதித்த விவகாரம்.. விஷால் மீது பாலியல் புகார் கூறிய பெண் கைது!
Recommended Video
சென்னை: விஷால் மீது பாலியல் புகார் கூறிய பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விஷால் மீது பேஸ்புக்கில் தர்ஷினி என்ற பெண் ஒருவர் பாலியல் புகார் கூறி இருந்தார். அதில் அவர், நடிகர் விஷால் தனது வீட்டுக்கு அருகே உள்ள பெண் ஒருவரின் வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாகவும், அவ்வீட்டின் சுவர் மீது ஏறிக் குதித்து வெளியில் சென்றதாகவும் அவர் பதிவிட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

அவ்வீட்டில் உள்ள பள்ளி மாணவி ஒருவருடன் விஷாலுக்கு தொடர்பு இருப்பதாகவும் அவர் அப்பதிவில் கூறியிருந்தார். தமிழ்த் திரையுலகில் இந்தப் புகார் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயார், ராயப்பேட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். பின்னர் அந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைமுக்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில் திருச்செங்கோட்டில் தலைமறைவாக இருந்த தர்ஷினியைப் போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அழைத்துவரப்பட்ட தர்ஷினி 15 நாள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.


Click it and Unblock the Notifications