Vishal - முதல் படத்தின் இரண்டாவது நாளே ஃபர்ஸ்ட் நைட் சீன்.. அனுபவம் பகிர்ந்த விஷால்
சென்னை: Vishal (விஷால்) தன்னுடைய முதல் படத்தின் இரண்டாவது நாளே ஃபர்ஸ்ட் நைட் சீன் ஷூட் செய்யப்பட்டதாக விஷால் தெரிவித்திருக்கிறார்.
தமிழில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விஷால்.செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான அவர் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். திரைத்துறையின் எந்த விஷயமாக இருந்தாலும் அதற்கு குரல் கொடுக்கக்கூடிய விஷால் தற்போது நடிகர் சங்க கட்டடம் கட்டியே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்.மேலும் அந்த கட்டடத்தை கட்டினால்தான் திருமணம் செய்வேன் என்றும் உறுதி பூண்டிருக்கிறார்.

அவன் இவன்: விஷாலை சிறந்த நடிகராக அடையாளப்படுத்தியது பாலாவின் அவன் இவன் திரைப்படம். ஆனால் அந்தப் படமும் வணிக ரீதியாக சரியாக போகவில்லை. இந்த சூழலில் அவர் ஹிட் கொடுத்தே பல வருடங்கள் ஆகிவிட்டன. இதனால் எப்படியாவது ஒரு ஹிட்டை கொடுத்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்.
மார்க் ஆண்டனி: நிலைமை இப்படி இருக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார் விஷால். அதில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். டைம் ட்ராவலை மையப்படுத்தி உருவாகியிருக்கும் மார்க் ஆண்டனி இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் இதுவரை டீசண்ட்டான விமர்சனத்தையே கொடுத்துவருகின்றனர்.
முதல் பட அனுபவம்: இந்நிலையில் தனது முதல் படமான செல்லமே படத்தில் நடித்த அனுபவத்தை ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார் விஷால். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "செல்லமே ஷூட்டிங் தொடங்கிய இரண்டாவது நாளே ஃபர்ஸ்ட் நைட் சீனை எடுத்தார்கள். அதிலும் ஒரே போர்வைக்குள் இரண்டு பேரும் இருப்பது போன்ற காட்சி அது.

உடனே நான் இயக்குநரிடம் இந்த ஷூட்டிங்கை ஏன் சார் இப்பவே வெச்சீங்க என கேட்டேன். உடனே படத்தின் இயக்குநர் இது ஒன்றும் தவறான காட்சியெல்லாம் இல்லை. வா என சொல்லி தேற்றினார். எனக்கு கூச்சம் எல்லாம் இல்லை. ஏனென்றால் கூத்துப்பட்டறையில் எனக்கு சொல்லிக்கொடுத்த முதல் விஷயம் என்னவென்றால் கூச்சத்தை விட வேண்டும் என்பதுதான்.
இரண்டாவது நாளேவா?: நான் ஏன் அப்படி கேட்டேன் என்றால் நடிகையுடன் ஒழுங்காக பேசவே இல்லை. அப்படிப்பட்ட சூழலில் எப்படி நடிப்பது என்று எனக்கு தோன்றியது. ரீமாசென் முதன்முறை வந்தபோது என்னிடம் இயக்குநர் ரீமாசென்னை அறிமுகப்படுத்தினார். பிறகு ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோது திடீரென ஒருநாள் என்னிடம், 'விஷால் நீ கண்டிப்பாக இந்த சினிமா துறையில் பெரிய ஆளாக வருவாய். எனக்கு தோன்றுகிறது' என சொன்னார். அப்படி என்னிடம் முதன்முறையாக கூறியது ரீமாசென் மட்டும்தான்" என்றார்.


Click it and Unblock the Notifications











