பாலா படத்துக்கு பிறகு இந்தப் படத்துலதான் உடைந்து அழுதேன்... விஷால் நெகிழ்ச்சி

சென்னை : நடிகர் விஷால் நடிப்பில் வீரமே வாகை சூடும் படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்றைய தினம் கமலா திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேசிய விஷால் பல்வேறு விஷயங்கள் குறித்து உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார்.

வீரமே வாகை சூடும் படம்

வீரமே வாகை சூடும் படம்

நடிகர் விஷால் லீட் கதாபாத்திரத்தில் நடித்து வரும் 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி வெளியாகவுள்ள படம் வீரமே வாகை சூடும். இந்தப் படம் கடந்த பொங்கலன்று ரிலீசாக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தேதி தள்ளிப் போயுள்ளது.

து.பா சரவணன் இயக்கம்

து.பா சரவணன் இயக்கம்

அறிமுக இயக்குநர் து.பா சரவணனின் இயக்கத்தில் இந்தப் படத்தை விஷால் பிலிம் பேக்டரி தயாரித்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. இதில் விஷால், டிம்பிள், யுவன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

விஷாலின் சுயநலம்

விஷாலின் சுயநலம்

நிகழ்ச்சியில் பேசிய விஷால், து பா சரவணனின் குறும்படத்தை பார்த்தே அவரை இந்த படத்தில் இணைத்ததாகவும் இதில் தன்னுடைய சுயநலமும் உள்ளதாகவும் குறிப்பிட்டார். அறிமுக இயக்குநர் என்றால் ஜெயிக்க வேண்டிய வெறி காணப்படும் என்றும் அதை தான் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

யுவன் சகோதரர் போன்றவர்

யுவன் சகோதரர் போன்றவர்

படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் தான் நீண்ட நாட்களாக பயணம் செய்து வருவதாகவும் அவர் தன்னுடைய சகோதரர் போன்றவர் என்றும் விஷால் தெரிவித்துள்ளார். தன்னை காப்பாற்றும்படி தான் எப்போதுமே கேட்பேன் என்றும் அவரும் அதை செய்வார் என்றும் அவர் மேலும் கூறினார்.

படத்தில் உடைந்து அழுதேன்

படத்தில் உடைந்து அழுதேன்

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தப் படத்தில் தான் உடைந்து அழுததாகவும், பாலா படத்திற்கு பிறகு இந்தப் படத்தில்தான் அந்த அனுபவம் தனக்கு கிடைத்ததாகவும் அவர் மேலும் கூறினார். படத்தில் சவால் நிறைந்த பல காட்சிகளை சரவணன் தனக்கு தந்ததற்கு தான் நன்றி சொல்லிக் கொள்வதாகவும் தெரிவித்தார்.

சோஷியல் மீடியாவிலிருந்து டிம்பிள் தேர்வு

சோஷியல் மீடியாவிலிருந்து டிம்பிள் தேர்வு

சோஷியல் மீடியா தனக்கு பிடிக்காது என்றாலும் டிம்பிளை பேஸ்புக்கிலிருந்தே தங்களது குழு தேர்ந்தெடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். படத்தில் மாரிமுத்து உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பான கதாபாத்திரங்கள் உள்ளதாகவும் அவர் கூறினார்.

5 மொழிகளில் வெளியாகும் படம்

5 மொழிகளில் வெளியாகும் படம்

படத்தில் ஹீரோவும் வில்லனும் கடைசி காட்சியில்தான் சந்திப்பார்கள் என்றும் படத்தின் அனைத்து காட்சிகளும் இயற்கையாக தோன்றும்படி படமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் ரிலீசாக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

கண் பார்வை பாதிப்பு

படத்தின் சூட்டிங்கின்போது தனது கண்ணில் கண்ணாடி துண்டு பட்டு, பார்வை மங்கியுள்ளதாகவும் படத்தின் ரிலீசுக்கு பிறகே அதற்கான சிகிச்சையை தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் விஷால் மேலும் கூறினார். இந்தப் படம் விஷாலின் 32வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X