விஷால் மட்டும் கொஞ்சம் இறங்கி வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
Recommended Video

சென்னை: கிரியேட்டரான பார்த்திபன் கொடுத்த ஐடியாக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இளையராஜா 75 நிகழ்ச்சி இதை விட பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கும்.
தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இளையராஜா 75 நிகழ்ச்சி நல்லபடியாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியில் எத்தனையோ பேர் கலந்து கொண்டபோதிலும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வந்தது தான் அனைவரையும் கவர்ந்தது.
அதிலும் குறிப்பாக ரஹ்மான் கீ போர்டு வாசிக்க இளையராஜா பாடியதை மறக்கவே முடியாது.

ஐடியாக்கள்
இளையராஜா 75 நிகழ்ச்சியில் ஏ.ஆர். ரஹ்மான் கலந்து கொள்ள இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தான் காரணம். நிகழ்ச்சியை வித்தியாசமாக நடத்த தான் கொடுத்த ஐடியாக்களை யாரும் ஏற்காததால் பார்த்திபன் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணை தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

வித்தியாசம்
பார்த்திபன் ஒரு கிரியேட்டர். இளையராஜாவின் தீவிர ரசிகர். அவர் வித்தியாசமாக யோசிக்கக் கூடியவர். அவர் கொடுத்த ஐடியாக்களை ஏற்றுக் கொண்டிருந்தால் இளையராஜா 75 நிகழ்ச்சி இதை விட மிகப் பெரிய வெற்றி அடைந்திருக்கும். அவரின் ஒரேயொரு ஐடியாவான ரஹ்மான் தான் நிகழ்ச்சியை பலருக்கும் பிடிக்க காரணமாக இருந்தது.

மொத்தமும்
ஒரு ஐடியாவுக்கே இப்படி நிகழ்ச்சி அம்சமாக அமைந்தது என்றால் பார்த்திபனின் அனைத்து ஐடியாக்களையும் ஏற்றிருந்தால் எவ்வளவு பெரிய வெற்றியாக இருந்திருக்கும். கிரியேட்டர்களை மதிக்க வேண்டும். மதிப்பு இல்லாததால் தான் ஒதுங்கிவிட்டார் பார்த்திபன். தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால் பார்த்திபனின் ஐடியாக்களை ஏற்றுக் கொண்டிருந்திருக்கலாம்.

கட்டிப்பிடி
96 படத்தின் 100வது நாள் விழாவை தொகுத்து வழங்கிய பார்த்திபன் விஜய் சேதுபதியை மேடைக்கு அழைத்து த்ரிஷாவை கட்டிப்பிடிக்க வைத்து அந்த நிகழ்ச்சி பற்றியே அனைவரையும் பேச வைத்துவிட்டார். திறமைசாலியான பார்த்திபனை ஒதுக்காமல் ஏற்றுக் கொண்டால் நல்லது.


Click it and Unblock the Notifications











