சந்தோஷத்தில் பூரித்துப்போன விஷால்… மகிழ்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா ?

சென்னை : நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியான தகவலை பகிர்ந்து பூரித்துப் போனார்.

தயாரிப்பாளர் ஜிகே ரெட்டி அவர்களின் மகனான விஷால். நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, செல்லமே திரைப்படத்தின் மூலம் திரையில் தனது அறிமுகத்தை கொடுத்தார். பின் நடிகர் விஷால் ஒரு சில சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து உள்ளார்.

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் இருந்த விஷால், சமீபத்தில் வெளிவந்த நடிகர் சங்க தேர்தலில் விஷாலின் அணி தான் மீண்டும் வெற்றி பெற்றது.

சமீபத்தில் விஷாலின் நடிப்பில் வீரமே வாகை சூடும் படம் வெளியான. இந்த படத்தை து.பா. சரவணன் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் டிம்பிள் ஹயாத்தி , யோகி பாபு, ரமணா உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.

vishal sister blessed with baby girl, Vishal happy tweet

இதனை அடுத்து விஷால் அவர்கள் வினோத் குமார் இயக்கத்தில் லத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து நடிகர்கள் ராணா புரொடக்ஷன்ஸ் சார்பாக தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும், இந்தப் படத்தின் முதல் பார்வை போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது

vishal sister blessed with baby girl, Vishal happy tweet

இந்நிலையில், விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது தங்கைக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். இதைவிட என்ன கேட்டுவிட முடியும், மீண்டும் மாமாவாகி இருக்கிறேன் என்பதில் பெருமகிழ்ச்சி. என்னுடைய தங்கை ஐசுவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. புதிய இளவரசியை கடவுள் ஆசீர்வதிக்கட்டும். இன்ஷா அல்லாஹ் என்று குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் விஷாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

vishal sister blessed with baby girl, Vishal happy tweet

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X