Vishal: தப்பு செஞ்சுட்டீங்க சி.வி. சண்முகம்.. மரியாதையை கெடுத்துக்காதீங்க.. நடிகை விவகாரம் விளாசிவிட்ட விஷால்

சென்னை: எல்லா கட்சிகளுக்கும் யாராவது ஒருவராவது பேசுகிற பேச்சில் அடிக்கடி அந்த கட்சிக்கு சர்ச்சையை உருவாக்கும்படி ஆனவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி பேசி சர்ச்சையை உருவாக்குபவர்கள் அனுபவம் இல்லாத அரசியல்வாதிகள் என்றால் கூட பரவாயில்லை, ஆனால் முன்னாள் அமைச்சர், மாநிலங்களவை உறுப்பினர் என இன்றைய அதிமுகவின் வட மாவட்டங்களின் முகமாக இருக்கும் சி.வி. சண்முகம் அண்மையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பிரபல நடிகை குறித்து மோசமாக பேசினார்.

இது பெரும் சர்ச்சையாக மாற, திரைத்துறை, அரசியல் துறை என பலரும் அவருக்கு கண்டனங்களைத் தெரிவித்தனர். சி.வி. சண்முகம் இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை பொது வெளியில் பேசுவது என்பது இது முதல் முறையல்ல, இது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால் அவர் மீது கட்சி எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதே என்று பலரும் ஆதங்கப்பட்டு வருகிறார்கள்.

Vishal Slams ADMK C V Shanmugam Over Controversial Remarks on Actress

இப்படி இருக்கும்போது நடிகரும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளருமான விஷால் இந்த விவகாரம் தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அண்மையில் பேசும் போது இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகை குறித்து மிகவும் மோசமாக பேசினார். அவர் பேசிய மோசமான பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். கண்டனத்திற்குரிய பேச்சுதான் அவருடையது. அதே நேரத்தில் நடிகர் சங்கத்தின் சார்பில் இருந்து நாங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினோம்.

தை தட்டல்: ஒரு மனிதனாக, வாக்காளனாக, சமூக அக்கறை கொண்டவனாக, தென்னிந்திய நடிகர் சங்க செயலாளராக ஒன்று சொல்ல நினைக்கிறேன். நீங்கள் ஒரு நடிகை குறித்து கொச்சையாக பேசி உள்ளீர்கள், அவர் இந்திய அளவில் புகழ் பெற்ற நடிகை, ஒரு குடும்பத் தலைவியும் கூட. அப்படி இருக்கும் போது நீங்கள் கை தட்டல் வாங்க ஒரு நடிகையை கொச்சையாக பேசுவீர்களா? ஒரு நலத் திட்டத்தை அறிவித்து கை தட்டல் வாங்குங்கள்.

மரியாதையை கெடுத்துக்காதீங்க: நான் இப்படி பேசுவதை நீங்கள் பார்ப்பீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் பதில் சொல்ல வேண்டும் என்றும் நினைக்கிறேன். அம்மா அவர்களின் ஆட்சியில் நீங்கள் சிறைத் துறைக்கு அமைச்சராக இருந்துள்ளீர்கள். அம்மா அவர்களின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு மட்டுமல்ல மரியாதையும் இருந்தது. நீங்கள் பயன்படுத்திய வார்த்தைகளால் உங்களுடைய மரியாதையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள். பெண்களுக்கு மதிப்பு அளிப்பது என்பது கடமை அல்ல, அது நமது இயல்பிலேயே இருக்க வேண்டும். எங்கள் துறை சார்ந்த பெண்களை விமர்சிப்பதை பார்த்துக் கொண்டு எங்களாலும் அமைதியாக இருக்க முடியாது. அதற்காகத்தான் இந்த பதிவு. எந்த பெண் குறித்து நீங்கள் அவதூறாக மரியாதைக்குறைவாக பேசி இருந்தாலும் நான் அதை கண்டித்திருப்பேன்" என்று அந்த வீடியோவில் பேசி உள்ளார்.ன் இவரது இந்த பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X