படம் வெளியான 3 நாளுக்கு.. தியேட்டருக்குள் ரிவ்யூ எடுக்காதீங்க.. விஷால் வைத்த செக்!

சென்னை: ரூ.30 கோடி பட்ஜெட்டில் சயின் பிக்சன் ஆக்சன் கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் திரைப்படம் 'ரெட் பிளவர்'. இந்த படத்தை இயக்குனர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கி உள்ளார். இதில், விக்னேஷ், மனிஷா ஜஷ்னானி, நாசர், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ஒய்.ஜி. மகேந்திரன், லீலா சாம்சன், நிழல்கள் ரவி, டி.எம். கார்த்திக், சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 8ந் தேதி தியேட்டரில் வெளியாக இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் கலந்த கொண்டு பேசிய விஷால், ரெட் பிளவர் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு வந்ததற்கு மிகவும் நன்றி என்று சொன்னீர்கள். நன்றி சொல்வதற்கு எதுவுமே இல்லை. இது என்னுடைய கடமை, சிறிய படம், பெரிய படம் என்றெல்லாம் இல்லை. இந்த திரையில் எது திரையிடப்படுகிறதோ அது தான் படம். அது புது ஹீரோவாக இருந்தாலும், ஸ்டார் ஹீரோவாக இருந்தாலும், புது இயக்குனராக இருந்தாலும், பிரபல இயக்குநராக இருந்தாலும் அது திரைப்படம் அவ்வளவுதான். குறிப்பாக இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு நான் வந்ததற்கு காரணம் என் நண்பன் விக்னேஷ் தான். அவர் பல வலிகளையும் சோதனைகளையும் கடந்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இந்த ரெட் பிளவர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

Vishal speech Red Flower
Photo Credit:

விஷால் வேண்டுகோள்: இந்த இடத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர் கதிரேசன் இருப்பதால், நடிகர் சங்கம் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்கிறேன். இனி மேல் புது திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகும் போது, தயவு செய்து 3 நாட்களுக்கு மட்டும், 12 காட்சிகளுக்கு மட்டும் பப்ளிக் ரிவ்யூ எடுக்க அனுமதிக்காதீர்கள். அவர்களை தியேட்டருக்குள் அனுமதிக்க வேண்டாம், தயவு செய்து யாரும் தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம். என் ஆதங்கத்தை நான் சொல்கிறேன். பொதுமக்களின் கருத்தை கேட்க வருபவர்கள், டிக்கெட் வாங்கிக் கொண்டு படத்தை பார்த்த பிறகு உங்களுடைய கருத்து என்னவென்று சொல்ல வேண்டும். படம் பார்த்துவிட்டு வருபவர்கள் தியேட்டருக்கு உள்ளேயே படம் எப்படி இருக்கிறது என்று ரிவ்யூ கேட்காமல் வெளியில் சென்று படம் எப்படி இருக்கிறது என்று கேட்டால் நன்றாக இருக்கும்.

யார் முதலில் விமர்சனம் கொடுக்கிறார்கள் என்பதை பார்ப்பதற்கு ஒரு கூட்டமே இருக்கிறது ரிவ்யூ கொடுக்க வேண்டாம் என்று சொல்லவில்லை தயவு செய்து படம் வெளியான மூன்று நாட்களுக்கு, அதாவது 12 காட்சிகளுக்கு தியேட்டர் வளாகத்திற்குள் ரிவ்யூ எடுக்க யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்று தியேட்டர் அதிபர்கள், விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்களுக்கு நான் ஒரு வேண்டுகோளாகவே வைக்கிறேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X