Mark Antony - ஆதிக் ரவிச்சந்திரன் என்னை காலி பண்ணிட்டான்.. மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்டில் விஷால் பேச்சு
சென்னை: Mark Antony Success Meet (மார்க் ஆண்டனி சக்சஸ் மீட்) மார்க் ஆண்டனி படத்தின் சக்சஸ் மீட்டில் விஷால் பேசியிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றிருக்கிறது.
நடிகர் விஷால் கடந்த சில வருடங்களாகவே ஹிட் எதுவும் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இதனால் எப்படியாவது ஒரு ஹிட் கொடுத்துவிட வேண்டும் என்பதில் முனைப்போடு இருந்தார். இப்படிப்பட்ட சூழலில் த்ரிஷா இல்லனா நயன் தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய இரண்டு படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனோடு கைகோர்த்தார்.

அய்யய்யோ ஆதிக்கா?: இதற்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இரண்டு படங்களில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படுதோல்வியை சந்தித்தது. மேலும் சில பிரச்னைகளையும் சந்தித்தது. இதன் காரணமாக ஏன் இப்போது விஷால் ஆதிக்கோடு சேர்கிறார். நிச்சயம் அவரது கரியரில் இதுவும் தோல்விப்படமாகவே அமையும் என்று சிலர் பேசினர்.
அலறவிட்ட ஆதிக்: ஆனால் ஆதிக் ரவிச்சந்திரன் மீது விஷால் நம்பிக்கை இழக்கவில்லை. அவரது நம்பிக்கையை காப்பாற்றும்படி மார்க் ஆண்டனி படத்தை சிறப்பாக உருவாக்கியிருந்தார். டைம் ட்ராவல் கான்செப்ட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருந்த இந்தப் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படமானது கடந்த 15ஆம் தேதி வெளியானது.
படத்தை பார்த்த ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரனுக்குள் இவ்வளவு திறமையான இயக்குநர் இருக்கிறாரா என்று வாயை பிளந்தனர். மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பையும் ஏகத்துக்கும் புகழ்ந்தனர். படத்துக்கு பெரும்பாலும் பாசிட்டிவ் விமர்சனங்களையே ரசிகர்கள் கொடுத்தனர். இதன் காரணமாக படம் ரிலீஸாகி 6 நாட்கள் முடிந்த சூழலில் இதுவரை 62 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் இருக்கிறது.
சக்சஸ் மீட்: இந்நிலையில் இன்று மார்க் ஆண்டனி படத்தின் சக்சஸ் மீட் நிகழ்ச்சி நடந்தது. இதில் விஷால், எஸ்.ஜே.சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய விஷால், "ஆதிக் ரவிச்சந்திரனின் முதல் படம் இதுதான். அடிக்கடி சூர்யா சாரிடம் நான் இதை சொல்வேன். ஆதிக்கோடு படம் செய்யப்போகிறேன் என்ற செய்தி வெளியானதும் பலரும் எனக்கு ஃபோன் செய்து ஏன் சார் ரிஸ்க் எடுக்குறீங்க. வேறு யாரின் இயக்கத்திலாவது நடிக்கலாமே என்றனர். ஆனால் நான் அவர்களிடம், எனக்கு கதை மீதும் அந்த தம்பி மீதும் நம்பிக்கை இருக்கிறது என்றேன்.
அப்போது பேசியவர்கள் இப்போது ஃபோன் செய்து படம் சூப்பராக இருக்கிறது என்று கூறுகின்றனர். இவ்வளவுதான் உலகம். அவர் முதல் படமாக த்ரிஷா இல்லனா நயன் தாரா படத்தை இயக்கினார். அந்தப் படம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸானது. அதேநாளில் என் படமான பாயும்புலி ரிலீஸானது. அந்தப் படம் அட்டர் ஃப்ளாப். அப்போது ஆதிக் என்னை காலி செய்துவிட்டான். அடுத்ததாக இன்னொரு விநாயகர் சதுர்த்திக்கு மத கஜ ராஜாவை ரிலீஸ் செய்ய திட்டமிட்டேன். ஆனால் சில பிரச்னைகளால் இன்றுவரை அந்தப் படம் ரிலீஸாகவில்லை.
இப்போது இந்தப் படம் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீஸ் ஆகி ப்ளாக் பஸ்டர் ஆகியிருக்கிறது. ஆக தம்பி உனக்கான விநாயகர் சதுர்த்தி 2023ஆம் ஆண்டுதான் என்று விநாயகர் அப்போதே எனக்கு உணர்த்தியிருக்கிறார் போல. விநாயகர், நான், எஸ்.ஜே.சூர்யா, ஆதிக் என நான்கு பேச்சிலர்கள் இணைந்து குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி படத்தை விநாயகர் சதுர்த்தி அன்று கொடுத்திருக்கிறோம்" என்றார்.


Click it and Unblock the Notifications











