»   »  முன்னாள் காதலி வரலட்சுமி நடத்திய கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் விஷால் பங்கேற்பு

முன்னாள் காதலி வரலட்சுமி நடத்திய கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் விஷால் பங்கேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வரலட்சுமி சரத்குமார் நடத்திய கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டார்.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க சேவ் சக்தி என்ற இயக்கத்தை துவங்கியுள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். இந்நிலையில் மகளிர் தினத்தன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டத்தில் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கையெழுத்து இயக்கத்தை நடத்தினார்.

Vishal supports Varalakshmi

முதல் கையெழுத்தை வரலட்சுமி போட்டார். இந்த கையெழுத்து இயக்க நிகழ்ச்சியில் சரத்குமார், ராதிகா சரத்குமார், ஜெயம் ரவி, நடிகை தன்ஷிகா உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் விஷாலும் கலந்து கொண்டார். காதலர்களாக இருந்த விஷாலும், வரலட்சுமியும் பிரிந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் அவர் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளார்.

Vishal supports Varalakshmi

பாலியல் குற்றங்களை தடுக்க மாவட்டம்தோறும் மகளிர் நீதிமன்றம், பாலியல் வழக்குகளில் 6 மாதத்திற்குள் தீர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வரலட்சுமி தமிழக அரசிடம் அளிக்க உள்ளார்.

English summary
Vishal has attended former girlfriend Varalakshmi Sarathkumar's signature campaign held in Chennai on women's day.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil